- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கோட் பட இயக்குனர் அவசரப்பட்டு செய்த அந்த விஷயம், தளபதி மேல அவ்வளவுதான் நம்பிக்கையா?,...

தி கோட் பட இயக்குனர் அவசரப்பட்டு செய்த அந்த விஷயம், தளபதி மேல அவ்வளவுதான் நம்பிக்கையா?, அப்பவும் அவர் தல ரசிகர்தான்னு காட்டீட்டாரே – கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

தமிழில் ஏப்ரல் மாதத்தில், சிவகாசி உள்ளிட்ட சில படங்களில் நடித்த வெங்கட்பிரபு, பிறகு தனது தந்தை கங்கை அமரனை போல இயக்குனராக மாறினார். சென்னை 28 அவர் இயக்கிய முதல் படம் பெரிய வெற்றியை பெற்றது. லோக்கல் நண்பர்களின் கிரிக்கெட் விளையாட்டை கதைக்களமாக்கி மாஸ் ஹிட் படமாக கொடுத்தார்.

தொடர்ந்து சரோஜா, சென்னை 28 2ம் பாகம், கோவா, மங்காத்தா, மாநாடு என அவரது வெற்றிப் பட வரிசையில், நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய தி கோட் படம், கடந்த வாரம் வெளியாகி 300 கோடி ரூபாய் வசூலை கடந்து திரையில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. எப்படியும் விரைவில் ரூ. 400 கோடியை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபகாலமாக மாஸ் ஹிட் படம் தரும், பல நூறு கோடி ரூபாய் வசூலை அள்ளித் தரும் இயக்குனர், படத்தில் நடித்த ஹீரோ, இசையமைத்த இசையமைப்பாளர் ஆகியோருக்கு தயாரிப்பாளர் தரப்பில் சொகுசு கார்களை பரிசாக வழங்குவது டிரண்டிங் ஆகி வருகிறது. அதனால் வெற்றிப் படங்கள் வெளியானால் அது கார்காலமாக மாறி விடுகிறது.

ஜெயிலர் படத்துக்காக ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான கார்களை பரிசாக வழங்கினார். விக்ரம் வெற்றிப் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை, கமல்ஹாசன் பரிசளித்தார். மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜூக்கு தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கார் பரிசளித்தார்.

- Advertisement -

இப்படி பெரிய வெற்றிப் படங்களை தரும் இயக்குனர்களுக்கு தயாரிப்பாளர்கள் கார் பரிசளிக்கும் நிலையில், தி கோட் படத்தை மாஸ் ஹிட் ஆக கொடுத்த இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு, படத்தை தயாரித்த ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் பரிசாக கார் தரலாம் என ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குனர் வெங்கட்பிரபுவே ரூ. 86 லட்சம் மதிப்பிலான புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்.

விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் வசூல் இனி அவ்வளவுதான் என தளபதி நம்பிக்கை இழந்துதான், வெங்கட்பிரபு கார் வாங்கி விட்டார் என அவரை ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதற்குள் உங்களுக்கு என்னய்யா அவசரம் என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய் படத்தை இயக்கி அதில் வந்த சம்பளத்தில் வெங்கட்பிரபு கார் வாங்கினாலும், அதை அஜீத்குமாரிடம் காட்டி நீங்க புது கார்ல ஒரு ரவுண்டு வாங்க தல, என்றுதான் தல ரசிகரான வெங்கட்பிரபு சொல்வார் என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்