- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்களின் கவனத்தை ஈர்த்த லப்பர் பந்து படத்துக்கு குவியும் பாராட்டு, இயக்குனர் வெற்றிமாறன் படக்குழுவினருடன் திடீர்...

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த லப்பர் பந்து படத்துக்கு குவியும் பாராட்டு, இயக்குனர் வெற்றிமாறன் படக்குழுவினருடன் திடீர் சந்திப்பு – படம் பற்றி என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா?

- Advertisement -

நேற்று முன்தினம் திரைக்கு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படமாக ரப்பர் பந்து உள்ளது. கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஹரீஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் குமார் இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். பார்க்கிங் படத்துக்கு பிறகு ஹரிஷ் கல்யாணுக்கு இந்த படம் முக்கிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

லப்பர் பந்து படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்த கதையை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி, டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண் இருவரும் இரட்டை நாயகர்களாக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

இந்த படத்தில் அன்பு என்ற கேரக்டரில் ஹரீஷ் கல்யாண் நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் நேற்று முன்தினம் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றிருக்கிறது. படம் பார்த்த பலரும் படத்தை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். படத்தின் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது.

லப்பர் பந்து படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவை அழைத்து பாராட்டினார். தற்போது இந்த படத்தை பார்த்த இயக்குனர் வெற்றிமாறன் படக்குழுவினரை சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் பாராட்டிய அந்த வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அதில் லப்பர் பந்து படக்குழுவிரை சந்தித்த பிறகு, இயக்குனர் வெற்றிமாறன் கூறுகையில், ரொம்ப நாள் கழித்து நான் இவ்வளவு எங்கேஜிங்காக, எண்டர்டெய்னிங்காக பார்த்த படம் லப்பர் பந்து. படத்தின் ரைட்டர், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர் என எல்லோருமே அவர்களுடைய வேலைகளை அவ்வளவு அழகாக செய்துள்ளனர்.

இந்த படத்தை பார்க்கும்போது, சின்ன வயதில் நான் எங்க ஊரில் கிரிக்கெட் டீம் வைத்து விளையாடிய அந்த நாட்கள் எனக்கு ஞாபகம் வந்தது. அப்போது நாங்கள் விளையாடிய போது இதே போன்ற சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அதனால் இந்த படத்தில் உள்ள ஒரு கேரக்டராகதான் நானும் அந்த படத்தை பார்த்த போது உணர்ந்தேன் என்று கூறியிருக்கிறார். ஒரு பொழுதுபோக்கு படமாக, பார்க்கிங் படத்துக்குப் பிறகு ஹரீஷ் கல்யாணுக்கு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்