- Advertisement -
Homeபொழுதுபோக்குசர்ச்சையான கதைகளில் பணத்தை கொட்டிய தயாரிப்பாளர் வெற்றிமாறன் - அந்த 2 படங்களும் திரைக்கு வருவது...

சர்ச்சையான கதைகளில் பணத்தை கொட்டிய தயாரிப்பாளர் வெற்றிமாறன் – அந்த 2 படங்களும் திரைக்கு வருவது எப்போது? காத்திருக்கும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் படங்களில் நடிப்பது மட்டுமின்றி படங்களை டைரக்ட் செய்யவும் விரும்புகின்றனர். இதில் சிலர் ஜெயிக்கின்றனர். ஒரு சிலர் தோற்று காணாமல் போய்விடுகின்றனர். அதே போல் இயக்குனர்கள் சிலர் நடிகர்களாகின்றனர். அதே போல் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராகவும் மாறி விடுகின்றனர். இதிலும் வெற்றி தோல்வி என்பது அவரவர் அதிர்ஷடத்தை பொறுத்ததுதான்.

தமிழ் சினிமாவில் பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். தனுஷ்தான் கதாநாயகனாக நடித்தார். முதல் படமே மாஸ் ஹிட் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஆடுகளம் படம் வெற்றிமாறனுக்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. இந்த படத்தில் நடித்த நடிகர் தனுஷூக்கு சிறந்த நடிகர் தேசிய விருதும் கிடைத்தது.

- Advertisement -

தொடர்ந்து வடசென்னை விசாரணை அசுரன் விடுதலை விடுதலை 2 ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வெற்றிமாறன் இப்போது சிம்பு நடிக்கும் ஒரு படத்தை டைரக்ட் செய்ய முயற்சித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்காமல் இழுத்துக்கொண்டே போகிறது.

இதற்கிடையே இயக்குனர் வெற்றிமாறன் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் சில படங்களை தயாரித்துள்ளார். இப்போது அறம் பட இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்த மனுஷி என்ற படத்தையும் பேட் கேர்ள் என்ற மற்றொரு படத்தையும் இயக்குனர் வெற்றிமாறன் சொந்தமாக தயாரித்திருக்கிறார். இந்த படங்களுக்காக ரூ. 20 கோடி வரை அவர் செலவு செய்திருக்கிறார்.

- Advertisement -

ஆனால் இந்த 2 படங்களுமே சர்ச்சைக்குரிய கதைக்களத்தில் உருவான படங்களாக இருக்கின்றன. குறிப்பாக பேட் கேர்ள் படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில் பள்ளி மாணவிகளை தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்கும்படியான காட்சிகள் அதில் வருவதாக கூறி கடும் விமர்சனம் எழுந்தது. அதே போல் மனுஷி படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த படங்கள் குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரும் அளவுக்கு நிலமை சீரியஸாக போன நிலையில், தயாரிப்பாளர் வெற்றிமாறன் பகீரத முயற்சிகளுக்கு பிறகு வருகிற செப்டம்பர் 5ம் தேதி பேட் கேர்ள் படம் திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மனுஷி படம் எப்போது ரிலீஸ் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த சர்ச்சையான கதைகளை கொண்ட படங்களில் ரூ. 20 கோடியை கொட்டிவிட்டு இப்போது இயக்குனர் வெற்றிமாறன் படங்களை வெளியிட முடியாமல் திண்டாடி வருகிறார்.

- Advertisement -

சற்று முன்