- Advertisement -
Homeபொழுதுபோக்குஎப்படியாவது எல்ஐகே படத்தை ஓட வையுங்க, நிறைய பேருக்கு நான் செட்டில்மென்ட் பண்ணணும் - ஓபனாக...

எப்படியாவது எல்ஐகே படத்தை ஓட வையுங்க, நிறைய பேருக்கு நான் செட்டில்மென்ட் பண்ணணும் – ஓபனாக பேசிய டைரக்டர் விக்னேஷ் சிவன்!

- Advertisement -

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் எல்ஐகே. இந்த படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. தமிழ் தெலுங்கு மொழிகளில் உலகம் முழுக்க எல்ஐகே படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் வரும் வாரங்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எல்ஐகே படத்தின் நன்றி அறிவிப்பு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகி கிருத்தி ஷெட்டி எஸ்ஜே சூர்யா கௌரி கிஷன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தயாரிப்பாளர் நடிகை நயன்தாரா காமெடி நடிகர் யோகி பாபு உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

- Advertisement -

இந்நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் பேசியதாவது, இந்த படம் குறித்து இன்ப்ளுயன்சர்கள் தவறாக எழுதுகிறார்கள். அவர்களுக்கு செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை. ஏதாவது முன்ன பின்ன எழுதி இந்த படத்தை ஓட வையுங்கள். இப்ப தம்லைன் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. மேடையில் கதறி அழுத விக்னேஷ் சிவன், மேடையை உடைத்தார் என ஏதாவது போட்டு படத்தை ஓட விடுங்கள்.

எல்ஐகே படம் கேவலமாக இருக்கிறது என வீடியோவில் ஆரம்பித்து உள்ளே நல்லவிதமாக பேசுறாங்க. அதை எப்படி கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் நான் இன்னும் செட்டில்மென்ட் பண்ண வேண்டியது நிறைய இருக்கிறது. இந்த வாரம் படம் ஓடிவிடும். அந்த பணம் கிடைத்துவிடும் என்று பலர் காத்திருக்கிறார்கள். எப்படியாவது இந்த படத்தை ஓட வையுங்கள். அப்படி ஓடாவிட்டால் ராமசாமி கதை தான். அந்த பணம் கடைசியில் ஊ ஊ தான். என்னை உங்க வீட்டுப் பிள்ளையாக நினைத்து படத்தை ஓட வையுங்கள்.

- Advertisement -

நான் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏதாவது குறை சொல்லிக்கிட்டே இருக்காங்க. நான் கேசரி செய்தால் ஏன் காரமாக இல்லை என்று கேட்கிறார்கள். நான் சிக்கன் குழம்பு வைத்தால் ஏன் இனிப்பாக இல்லை என்று கேட்கிறார்கள். படத்துல நல்ல விஷயங்கள் இருக்கிறது. என்னால் பயங்கரமாக படம் எடுக்க தெரியாது. உங்களுக்கு பயங்கரமாக கோவம் வந்தால் மனசுக்குள்ள வச்சுக்கோங்க.

என்னிடம் போனில் பேசுங்க. நேரில் பார்க்கும்போது உங்க கருத்தை சொல்லுங்க. ஏன்டா இப்படி பண்ணினேன்னு கேளுங்க. ஒரு வீடியோ போட்டு ஏதாவது செய்யாதீங்க. மீண்டும் சொல்கிறேன் எனக்கு செட்டில் பண்ண வேண்டியது நிறைய இருக்கிறது. இந்த படம் நல்லா ஓடணும். எங்கள் ஹீரோ செல்லக்குட்டி பிரதீப்பின் இந்த படமும் 100 கோடியை அள்ளியது என்று போஸ்டர் ஒட்டணும். அதுக்கு படத்தை ஓட வையுங்கள் என்று விக்னேஷ் சிவன் பேசியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்