- Advertisement -
Homeபொழுதுபோக்குஹெச் வினோத்தை அப்படி செஞ்சிரனும்னு எனக்குத் தோன்றியது... பகீர் கிளப்பிய இயக்குனர் பார்த்திபன்... எதுக்கு சார்...

ஹெச் வினோத்தை அப்படி செஞ்சிரனும்னு எனக்குத் தோன்றியது… பகீர் கிளப்பிய இயக்குனர் பார்த்திபன்… எதுக்கு சார் இப்படி எல்லாம்…

- Advertisement -

தமிழ் சினிமாவின் மிக நேர்த்தியான திரைப்படங்களை எடுப்பதில் வல்லவர் ஹெச் வினோத். சதுரங்க வேட்டை என்னும் திரைப்படத்தின் மூலம் தான் இவரது இயக்குனர் பயணம் தொடங்கியது. தனது முதல் திரைப்படத்திலேயே தான் யார் என்பதை நிரூபித்துக் காட்டினார் வினோத்.

 

- Advertisement -

பிறகு அவர் கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை இயக்கினார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் எடுத்த இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான மைல்கல் என்று கூறலாம். அந்த அளவுக்கு மிகவும் விவரங்களுடன் இந்த திரைப்படத்தை எடுத்திருந்தார் வினோத்.

 

- Advertisement -

இப்படி முதல் இரண்டு திரைப்படங்களுக்குமே, வினோத்திற்கு வெற்றி மேல் வெற்றி கொடுத்ததால் அஜித்தை இயக்கும் வாய்ப்பை அவர் பெற்றார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தை ரீமேக் செய்து அவர் மேற்கொண்ட பார்வை படத்தை இயக்கினார்.

 

சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் ஒன்று என இரண்டு முக்கியமான திரைப்படங்களை கொடுத்துவிட்டு அவர் ஏன் ரீமேக் படத்தை இயக்குகிறார் என்று அப்போதே கேள்விகள் எழுந்தன. ஒருவேளை அஜித் என்பதால், இயக்குனர் சம்மதித்து வைப்பார் என்று பேசப்பட்ட சூழலில், அந்த திரைப்படம் வெளியாகி வரவேற்பு பெற்றது.

 

பிறகு அஜித்தை வைத்து அவர் இயக்கிய வலிமை திரைப்படம் படுதோல்வி அடைய, பின்னர் எடுக்கப்பட்ட துணிவு திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. இப்படியான சூழலில் தான் விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் வினோத். முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது.

 

இயக்குனர் ஆர் பார்த்திபனிடம் உதவியாளராக எச் வினோத் இருந்த நிலையில், அவருக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து பார்த்திபன் கலகலப்பாக பேசியிருக்கிறார். அதில் வினோத்தை சாவடித்து விடலாமா என்று தோன்றுகிறது என்று கலகலப்பான தொனியில் பேசி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அதன்பிறகு விஜயிடம் சென்று படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று விடலாம் என்று தோன்றுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். பார்த்திபனின் இந்த பேச்சு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

- Advertisement -

சற்று முன்