- Advertisement -
Homeபொழுதுபோக்குவிமர்சனத்தில் சிக்கி தவிக்கும் கோட் பர்ஸ்ட் சிங்கிள் பாட்டு - இந்த விஷயங்களை எல்லாம் எப்படி...

விமர்சனத்தில் சிக்கி தவிக்கும் கோட் பர்ஸ்ட் சிங்கிள் பாட்டு – இந்த விஷயங்களை எல்லாம் எப்படி வெங்கட்பிரபு கண்டுக்காம விட்டாரு?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில், த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்) படப்பிடிப்பு ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பை முடித்துக் கொண்டு, வரும் 17ஆம் தேதி கோட் படக்குழு சென்னை திரும்புகிறது. இதையடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை டைரக்டர் வெங்கட் பிரபு மேற்கொள்ள இருக்கிறார். இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி, தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படம் விஜய் 69, இயக்குனர் எச். வினோத் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாள் அன்று சென்னையில், பிரசாத் ஸ்டுடியோவில் துவங்குகிறது. அதன் பிறகு ஐதராபாத்தில் 30 நாட்கள் சூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் முடித்துவிட்டு, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள நடிகர் விஜய் முடிவு செய்து இருக்கிறார். அதனால் ஆறு மாதங்களுக்குள் தனது 69 படத்தை முடித்துவிட விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை விஜயின் பினாமிகள் எஸ்எஸ் லலித்குமார் மற்றும் மேலாளர் ஜெகதீஷ் இருவரும்தான் தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று கோட் படத்தில் இடம்பெற்ற ‘விசில் போடு’ என்ற பாடல், தமிழ் புத்தாண்டு தினத்தில் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக வெளியானது. இந்த பாடலைப் பார்த்தவர்களில், விஜய் ரசிகர்கள் ஒருபுறம் இந்த பாடலை வரவேற்றாலும், பெரும்பாலான ரசிகர்கள் இந்த பாடலைப் பார்த்து பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர். ஏனென்றால் இந்த பாட்டில் நடனங்களும், பின்னணி காட்சிகளும், லைட்டிங் உள்ளிட்ட எதுவுமே ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை.

குறிப்பாக விஜய்க்கான பாட்டில், விஜய் மட்டுமே நடனமாடி இருக்க வேண்டிய நிலையில் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரும் சேர்ந்து ஆடியிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. அதுவும் நடிகர் பிரபுதேவா டான்ஸ் மாஸ்டர் என்ற நிலையில், அவர்தான் இந்த பாட்டில் ஸ்கோர் செய்துள்ளார் என்று ரசிகர்கள் வெளிப்படையாக கூறுகின்றனர். பிரசாந்த் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்தும் 51 வயதிலும், அதே சுறுசுறுப்பில், பெர்பாமென்ஸ்சில் இன்னும் இருக்கிறார் என்பதை இந்த நடனக் காட்சியில் நிரூபித்திருக்கிறார்.

தனது படங்களில், விஜய் இதுவரை சொந்த குரலில் பாடிய பாடல்களில் இந்த கோட் பட பாடல்தான் ரொம்ப ரொம்ப சுமார் ரகம் என்று விஜய் ரசிகர்களே வெளிப்படையாக கூறுகின்றனர். இந்த படத்தில் இசை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்த பாடல் ரசிகர்களின் மனம் கவரவில்லை. பாடல் வரிகள் வசனங்களாக உள்ளது. குறிப்பாக இசை மிகவும் ஏமாற்றமாக உள்ளது என்று ரசிகர்கள் புலம்புகின்றனர். இதுவே அனிருத்தாக இருந்திருந்தால் இந்த பாடல். வேற லெவலில் இருந்திருக்கும் என்று படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை திட்டி வருகின்றனர். ஒரு பாடல் காட்சியிலேயே இவ்வளவு விஷயங்களை கவனிக்காமல் விட்ட வெங்கட்பிரபு, படத்தை எப்படி தரப் போகிறாரோ? என்று விஜய் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

சற்று முன்