- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் பார்த்துவிட்டு, 'தலைவா' என கத்திய விஜய்யின் மகன்.. வீடியோ இதோ!!

ஜெயிலர் பார்த்துவிட்டு, ‘தலைவா’ என கத்திய விஜய்யின் மகன்.. வீடியோ இதோ!!

- Advertisement -

இரண்டு வருடங்களுக்கு பிறகு ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. தமிழ்நாட்டில் 900 ஸ்க்ரீன்கள், உலகளவில் 4,000 ஸ்க்ரீன்கள் கலைகட்டியது ஜெயிலர். ரசிகர்கள் திரையரங்குகளில் பட்டாசு வெடித்தும், ரஜினிக்காக வைக்கப்பட்ட கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் திருவிழா போல் கொண்டாடினர். இதனால் தமிழகத்தில் பல திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

படத்தை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பியாக இருக்கின்றன. குறிப்பாக நெல்சன் திலீப்குமார் ரஜினிகாந்த்தை மாஸ் ப்ள்ஸ் க்ளாஸாக காட்டிவிட்டார். டார்க் காமெடி, யோகிபாபு, ரஜினிகாந்த் காம்பினேஷன் எல்லாம் பக்காவாக ஒர்க் அவுட் ஆகிவிட்டன. ரஜினியினி நடிப்பும், ஸ்டைலும் இன்னமும் அவரிடமிருந்து குறையவே இல்லை. இதனால் படம் மெகா ஹிட் என்று கூறிவருகின்றனர்.

ஒருபக்கம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைக்க மறுபக்கம் வசூலிலும் பல சாதனையை படைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி இந்தியாவில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துவிட்டதாம். தமிழ்நாட்டில் 29 கோடி ரூபாய், கர்நாடகாவில் 11 கோடி ரூபாய், கேரளாவில் ஐந்து கோடி ரூபாய், ஆந்திரா&தெலங்கானாவில் 10 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது என கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக ஓபனிங் டேவில் அஜித் நடித்த துணிவு படம் 23 கோடி ரூபாயை வசூலித்து சாதனைப் படைத்தது. அதனை ஜெயிலர் படம் தற்போது உடைத்திருக்கிறது. உள்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் வசூல் சக்கைப்போடு போட்டிருக்கிறது. அமெரிக்காவில் 1.15 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்திய மதிப்பில் 12 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. இது வாரிசு படம் அமெரிக்காவில் செய்த மொத்த வசூலைவிடவும் அதிகம் என கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் வாரிசின் மொத்த வசூலையும் ஒரே நாளில் ஜெயிலர் அள்ளியிருக்கிறது. எனவே இதிலிருந்தாவது யார் உண்மையான சூப்பர் ஸ்டார் என்பதை புரிந்துகொள்ளுங்கள் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். இதற்கிடையே நேற்று ஜெயிலர் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் கண்டு ரசித்தனர்.

அந்தவகையில் இயக்குநர் ஏ.எல்.விஜய் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜெயிலரை பார்த்து ரசித்தார். படம் பார்த்துவிட்டு காரில் சென்றபோது அவரது மகன் தலைவரே என உற்சாகமாக கத்தும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவை ரசிகர்களும் தலைவரு நிரந்தரம் என குறிப்பிட்டு அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

சற்று முன்