- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கிறதா? இயக்குனர் விக்ரமன் இப்படி சொல்லி விட்டாரே… - குழப்பத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கிறதா? இயக்குனர் விக்ரமன் இப்படி சொல்லி விட்டாரே… – குழப்பத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

புதுவசந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரமன். குடும்பம் காதல் இசை சென்டிமென்ட் காமெடி என ஜனரஞ்சகமான படங்களை தந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். சூர்ய வம்சம் வானத்தை போல உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் கோகுலம் பூவே உனக்காக உன்னை நினைத்து என விக்ரமன் இயக்கிய படங்கள் பெரிய வெற்றிகளை பெற்றவை.

நடிகர் விஜய்க்கு பூவே உனக்காக படம்தான் அவரது சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. அதன்பிறகு காதலுக்கு மரியாதை துள்ளாத மனமும் துள்ளும் லவ்டுடே போன்ற காதல் படங்கள் அவரை வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது. விஜய்க்கு விக்ரமன் சிறந்த அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தார்.

- Advertisement -

அதே நேரத்தில் உன்னை நினைத்து படத்தில் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்தவர் விஜய்தான். ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் குறித்து விஜய்க்கும் விக்ரமனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், அந்த படத்தில் இருந்து விஜய் சுமூகமாக விலகினார். அதன்பிறகு அதே கேரக்டரில் நடிகர் சூர்யா நடித்து பெரிய வெற்றியை கொடுத்தார்.

இயக்குனர் விக்ரமன் மகன் கனிஷ்கா விஜய் புதுமுக நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். அவர் நடித்த ஹிட் லிஸ்ட் என்ற படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் சரத்குமார் கேஎஸ் ரவிக்குமார் போன்ற பிரபல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். விரைவில் விக்ரமன் தனது மகனை வைத்து படம் இயக்க ஆயத்தமாகி வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, தமிழ் சினிமா முன்பு போல இல்லை. நிறைய மாறிவிட்டது. இப்போது ஆரோக்கியமான போக்கில் தான் அது போய்க்கொண்டு இருக்கிறது. நிறைய நல்ல இயக்குனர்கள், நல்ல இசையமைப்பாளர் நல்ல ஒளிப்பதிவாளர்கள் என டெக்னீஷியன்கள் அதிகமாக உள்ளனர்.

லப்பர் பந்து வாழை குடும்பஸ்தன் போன்ற நல்ல கதையம்சம் உள்ள யதார்த்தமான படங்கள் பெரிய வெற்றிகளை பெறுகின்றன. ஆனால் அதே நேரத்தில் நடிகர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது. குறிப்பிட்ட 5 நடிகர்கள் படங்கள் மட்டுமே பெரிய வியாபாரம் ஆகிறது. மார்க்கெட் உள்ள நடிகர்களின் எண்ணிக்கை தமிழ் சினிமாவில் அதிகரிக்க வேண்டும். அந்த பற்றாக்குறை நீங்கி நிறைய நடிகர்கள் படங்கள் ஜெயிக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்