- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித்குமார் படத்தில் விஜய் நடிக்க எஸ்ஏ சந்திரசேகர் போட்ட அந்த கண்டிஷன் - அந்த படத்தின்...

அஜித்குமார் படத்தில் விஜய் நடிக்க எஸ்ஏ சந்திரசேகர் போட்ட அந்த கண்டிஷன் – அந்த படத்தின் தயாரிப்பாளரே சொன்ன தகவலுங்க இது!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருக்கிறார். ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் மிகப்பெரிய நடிகராக இருந்து வருகிறார். இந்த அதிகபட்ச சம்பளம், இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய், இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி இருக்கிறார். இப்போது நடித்துவரும் த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை தொடர்ந்து, அவர் மற்றும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க திட்டமிட்டுள்ளார். விஜய் 69 என்ற அந்த படத்தை டைரக்டர் எச் வினோத் டைரக்ட் செய்கிறார்.

- Advertisement -

இந்த படத்தை நடிகர் விஜய், தனது சொந்த பேனரில் தயாரிக்கிறார். செவன்த் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார், மற்றும் விஜயின் மேலாளர் ஜெகதீஷ் ஆகியோரது பெயரில், இந்த படத்தை தயாரிக்க இருப்பது நடிகர் விஜய்தான். அதாவது அவர்களது பெயரில், தனது சொந்த முதலீட்டில் விஜய் 69 படத்தை அவரே தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

நடிகர் அஜித்குமாரும், விஜயும் சமகாலத்தில் சினிமாவில் நுழைந்து, படிப்படியாக வளர்ந்து, இப்போது டாப் நடிகர்களாக இருக்கிறார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித்குமார் ஆகிய நான்கு பேர் மட்டுமே இப்போது தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விஜயுடன் அஜித்குமார் நடித்த படம் ராஜாவின் பார்வையிலே. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் வந்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், ரசிகர் மத்தியில் ஓரளவு வரவேற்பு பெற்ற படமாக இருந்தது. இந்த படத்தில் விஜய், அஜித் நடித்த போது இருவருமே வளரும் நடிகர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் சௌந்தர பாண்டியன், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, அஜித் குமார் என்னுடைய நெருங்கிய நண்பர் என்பதால் இந்த படத்தில் அவர் சம்பளம் வாங்காமல் எனக்கு நடித்துக் கொடுத்தார். இந்த படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்று நான் அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகரிடம் பேசியபோது அவர் ஒரு கண்டிஷன் போட்டார். இதில் விஜய் நடிக்க வேண்டும் என்றால், இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என்றார். அதே போல் இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்தார் என்று நேர்காணலில் சௌந்தரபாண்டியன் கூறி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்