தமிழ் சினிமாவில் இயக்குனர் விக்ரமன் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். புது வசந்தம் துவங்கி அவர் இயக்கிய பூவே உனக்காக சூரிய வம்சம் வானத்தை போல உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை நினைத்து என பல படங்கள் மாஸ் ஹிட் படங்களாக இன்று வரை ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்படுகின்றன.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, அமராவதி என்ற முதல் படத்தில் நடித்த பிறகு நான் என்னுடைய புதிய மன்னர்கள் படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க அஜீத்குமாரை கேட்டேன். அப்போது முதுகு தண்டுவடத்தில் ஏதோ பிரச்னை என்று மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தார். அதனால் ஸாரி சார், இந்த படத்தில் நடிக்க முடியாது அப்படீன்னு அவரோட மேனேஜர் கிட்ட சொல்லி அனுப்பி இருந்தார்.
அதுக்கு அப்புறம் நான் பாபு கணேஷை போட்டு அந்த படத்தை எடுத்து முடிச்சிட்டேன். அஜீத்குமார் நடிச்சிருந்தார்னா நீ கட்டும் சேலை மடிப்புல பாட்டுக்கு அஜீத்குமார் டான்ஸ் ஆடியிருப்பார். அதை பாபு கணேஷை போட்டு எடுத்தேன். அதனால் என்னமோ அஜீத்குமாருக்கு என்னை பிடித்து விட்டது.
ஒருவர் சக்ஸஸ்புல்லா இருக்கும் போது அவரை ஆயிரம் பேர் தேடி வருவாங்க. கொஞ்சம் பெயிலியர் இருக்கும்போது இவர் நம்மை கூப்பிட்டாரே அப்படீன்னு அஜீத்குமாருக்கு என்னை பிடித்திருக்கலாம். அப்புறம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படம் எடுத்த டைம்ல புரடியூசர்ஸ்தான் அஜீத்குமார் நடிக்க பரிந்துரை செஞ்சாங்க. இந்த கேரக்டர்ல அஜீத் நடிச்சா எப்படி இருக்குமுன்னு கேட்டாங்க, அவர் நடிச்சா ரொம்ப நல்லா இருக்குமுன்னு நான் சொன்னேன்.
ஆனால் இப்போ பெரிய நடிகராக இருக்கிறார். காதல் கோட்டை ஆசை படங்கள் எல்லாம் பெரிய ஹிட் ஆகி இருக்கு. அதனால் அவர் இந்த படத்துல கேட்டா நடிக்கணுமே என்று சொன்னேன். அதுக்கு அப்புறம் அடுத்த நாள் அஜீத்குமாரை ஆபீஸ்க்கே வரவழைச்சாங்க. அப்போ அஜீத்குமார் என்கிட்ட, சார் நீங்க என்ன கேரக்டர் சொன்னாலும் நடிக்கிறேன். வில்லனாக சொன்னாலும் நடிக்கிறேன் என்று சொன்னார்.
இல்லே சார், ரொம்ப நல்ல கேரக்டர்தான், கதை சொல்றேன் கேளுங்க என்றேன். அதெல்லாம் வேண்டாம் சார் என்று சொல்லிட்டு போய்விட்டார். அப்புறம் ஷூட்டிங்குக்கு வந்து நான் சொன்ன காட்சிகளில் பிரமாதமாக நடித்துக் கொடுத்தார். என்று அந்த நேர்காணலில் இயக்குனர் விக்ரமன் கூறியிருக்கிறார். உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படம் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது.





