- Advertisement -
Homeபொழுதுபோக்குரூ. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் 7 நாள் வசூல் இத்தனை கோடியா?...

ரூ. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் 7 நாள் வசூல் இத்தனை கோடியா? – விரைவில் சென்சுரி அடித்துவிடுமா?

- Advertisement -

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள மஞ்சும்மல் பாய்ஸ். கடந்த பிப்ரவரி 22ம் தேதி இந்த படம் வெளியான நிலையில், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனத்தை பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

கடந்த 1991ம் ஆண்டில் சந்தானபாரதி இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் குணா. இந்த படத்தில் கொடைக்கானலில் உள்ள ஒரு குகையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கும். இந்த படம், கமல் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படமாக இருந்தது. ஆனால் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை அப்போது பெறவில்லை.

- Advertisement -

மானசீகமாக அபிராமி என்ற பெண் மீது நேசம் கொள்ளும் குணா ( கமல்), ஒரு கட்டத்தில் கோவில் விழாவில், தன் மனதில் உள்ள கற்பனை உருவமான அபிராமியை பார்க்கிறார். அ;ந்த பெண்ணை கடத்திக்கொண்டு போய் கொடைக்கானல் மலைமேல் உச்சியில் உள்ள ஒரு குகையில் ஒளித்து வைத்திருப்பார்.

ஒரு கட்டத்தில் அந்த பெண்ணும், குணாவின் உண்மையான அன்பை புரிந்துக்கொண்டு அவனது காதலை ஏற்றுக்கொள்வது போல கதை இருக்கும். இதில்தான், கண்மணி அன்போடு நான் காதலன் எழுதும் கடிதம் என்ற பாடலை கமல்ஹாசன், ஜானகி பாடியிருந்தனர். இப்போதும் கமல் பாடல்களில் இது, பேவரைட் பாடலாக பலரும் கேட்டு ரசிக்கின்றனர்.

- Advertisement -

இந்த குணா படத்தில் இடம்பெற்ற குகையை மையப்படுத்தி, 2006ம் ஆண்டில் நடந்த சம்பவத்தை கருவாக கொண்டு உருவான படம்தான் மஞ்சும்மல் பாய்ஸ். கொடைக்கானலுக்கு வரும் 11 நண்பர்களில் ஒருவர் மட்டும் குணா குகையில் சிக்கிக்கொள்கிறார். அவரை நண்பர்கள் மீட்பதுதான் கதை. மலையாளம் மற்றும் தமிழ் கலந்த இந்த படம் பெரிய அளவில் மலையாளத்திலும், தமிழிலும் வெற்றிப் படமாக பேசப்பட்டு வருகிறது.

மஞ்சும்மல் பாய்ஸ் படம் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், படம் வெளியாகி 7 நாட்களில் உலகளவில் மொத்தம் ரூ.50 கோடியை வசூலித்துள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருப்பதால் இந்த படம் மிக விரைவில் ரூ. 100 கோடி வசூலை எட்டிவிடும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினர் சந்தோஷத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்