- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர்களுக்கு கிடைத்த கொடுப்பினை நான் உயிரோடு இருக்கும் போதே எனக்கும் கிடைக்கணும்; நெகிழ்ச்சியாக பேசிய இயக்குனர்...

அவர்களுக்கு கிடைத்த கொடுப்பினை நான் உயிரோடு இருக்கும் போதே எனக்கும் கிடைக்கணும்; நெகிழ்ச்சியாக பேசிய இயக்குனர் விக்ரமன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக நல்ல படங்களை தந்த இயக்குனர்களை எப்போதுமே ரசிகர்கள் மறப்பது இல்லை. அவர்கள் இயக்கிய படங்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தாலும், நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் படம் இயக்கினாலும் எப்போதுமே அந்த இயக்குனர்களின் படங்கள் மீது ரசிகர்களுக்கு ஈர்ப்பும் அபிமானமும் குறைவதே இல்லை.

அதனால்தான் 30 ஆண்டுகளில் 15 படங்களை மட்டுமே இயக்கிய இயக்குனர் ஷங்கர் படங்கள் எப்போதுமே கொண்டாடப்படுகின்றன. 25 ஆண்டுகளில் 10க்கும் குறைவான படங்களை இயக்கிய இயக்குனர் பாலாவின் படங்களும் தமிழ் சினிமாவில் தனி கவனம் பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் இருப்பவர்தான் இயக்குனர் விக்ரமன்.

புதுவசந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி பதித்தவர் இயக்குனர் விக்ரமன். முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றார். தொடர்ந்து நான் பேச நினைப்பதெல்லாம் வானத்தை போல பூவே உனக்காக உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் சூர்ய வம்சம் உன்னை நினைத்து பிரியமான தோழி போன்ற சூப்பர் ஹிட் படங்களை தந்தவர்.

நடிகர் விஜய்க்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஒரு வரவேற்பை அடையாளத்தை அங்கீகாரத்தை பெற்றுத் தந்த முதல் படம் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக தான். அதுவரை அடிதடி சண்டை காமெடி காதல் கலாட்ட என நடித்து வந்த விஜய்க்கு, அழுத்தமான ஒரு கேரக்டரில் நடிக்க வைத்து பெயர் வாங்கி கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன்தான் என்றால் அது மிகையல்ல.

இந்நிலையில் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா தமிழ் சினிமாவில் ஹிட் லிஸ்ட் என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, என் மகன் பிரபல இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அப்போதுதான் அவன் வேறு வேறு இமேஜூக்கு உயர முடியும்.

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகருக்கு கிடைத்த மிகப்பெரிய கொடுப்பினை, அவரது மகன் விஜய் நடிகராக உச்சத்துக்கு சென்றதை அவர் வாழும் காலத்தில் பார்த்துவிட்டார். இப்போது விஜய் அரசியலிலும் தலைவராகி விட்டார். அதே போல் இயக்குனர் டி ராஜேந்தரும், அவரது மகன் சிம்பு பெரிய நடிகராக உயரத்துக்கு சென்றதை பார்க்கும் கொடுப்பினை கிடைத்து விட்டது. அதே போல் நான் உயிரோடு இருக்கும் போதே என் மகனும் பெரிய ஹீரோவாக வரவேண்டும். அந்த கொடுப்பினை எனக்கு கிடைக்க வேண்டும் என்று இயக்குனர் விக்ரமன் நெகிழ்ச்சியாக அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.

சற்று முன்