- Advertisement -
Homeபொழுதுபோக்குதேவையின்றி ரஜினி படம் குறித்து விமர்சித்த இயக்குனர் விஷ்ணுவர்தன், இப்படி வம்பை விலை கொடுத்து...

தேவையின்றி ரஜினி படம் குறித்து விமர்சித்த இயக்குனர் விஷ்ணுவர்தன், இப்படி வம்பை விலை கொடுத்து வாங்கலாமா ப்ரோ?

- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு இந்தி மொழியில் பல படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். தமிழில் அறிந்தும் அறியாமலும் பட்டியல் பில்லா சர்வம் ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். அஜீத்குமார் நடித்த பில்லா படம் ரஜினிகாந்த் நடித்த பில்லா படத்தின் ரீ மேக் ஆகும்.

கடந்த 1980ம் ஆண்டில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பில்லா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரஜினியின் திரை பயணத்தில் பில்லா மிக முக்கியமான படமாகும். இரட்டை வேடங்களில் இதில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்த படத்தை அதே பெயரில் ரீமேக் செய்து இயக்கியவர் விஷ்ணுவர்தன். 2007ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் நாயகனாக அஜீத்குமார் நடித்திருந்தார்.

- Advertisement -

மேலும் இந்த படத்தில் நடிகர்கள் பிரபு சந்தானம் நயன்தாரா நமீதா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். ரஜினி கேரக்டரில் அஜீத்குமாரும், ஸ்ரீப்ரியா கேரக்டரில் நயன்தாராவும் நடித்த இந்த படத்தில் பாலாஜி கேரக்டரில் பிரபு நடித்திருந்தார். அஜீத் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படமாக பில்லா இருந்தது.

இந்நிலையில் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் இன்று வெளியான படம் நேசிப்பாயா. இந்த படத்தில் நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ், இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். நடிகர் ஆகாஷ் இந்த படத்தில்தான் நாயகனாக அறிமுகமாகிறார். இவர் நடிகர் அதர்வாவின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நேசிப்பாயா படத்தை, ஆகாஷின் மாமனார் பிரிட்டோ ரூ. 50 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறார். இன்று இந்த படம் வெளியான நிலையில், பொங்கல் போட்டி படங்களில் ஏற்கனவே வணங்கான் கேம் சேஞ்சர் மதகஜ ராஜா படங்களை தொடர்ந்து நேசிப்பாயா படமும் இன்று வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் பிரமோசனுக்காக நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் விஷ்ணுவர்தன், ரஜினிகாந்த் நடித்த பில்லா படம் தமிழில் சரியாக போகவில்லை. சரியாக போகாத பில்லா படத்தையா, அஜீத்குமாரை வைத்து டைரக்ட் செய்யப் போகிறோம் என்று எனக்கு தோன்றியது எனக் கூறிவிட்டார். ரஜினி நடிப்பில் மாஸ் ஹிட் படமான பில்லாவை தோல்வி படம் எப்படி சொல்லலாம் என விஷ்ணுவர்தனை ரஜினி ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்