- Advertisement -
Homeபொழுதுபோக்குரீ என்ட்ரி தரும் பிரபல அம்மா நடிகை, ஆனா இந்த முறை அம்மா இல்லையாம் -...

ரீ என்ட்ரி தரும் பிரபல அம்மா நடிகை, ஆனா இந்த முறை அம்மா இல்லையாம் – ஜீவா நடிக்கும் தகப்பன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

- Advertisement -

கடந்த 1980 90களில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக ஹீரோக்களுடன் டூயட் பாடிய பல நடிகைகள் இப்போது ஹீரோக்களின் அம்மாவாக நடித்துக்கொண்டு இருக்கின்றனர். சீரியல்களில் நடிக்கும் அம்மாக்களை விட இந்த சினிமா அம்மாக்களுக்கு சம்பளமும் அதிகம், பட வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

அந்த வரிசையில் இப்போது அம்மா நடிகைகளின் வரிசையில் சரண்யா பொன்வண்ணன் மீரா கிருஷ்ணன் ஸ்ரீ ரஞ்சனி லட்சுமி ராமகிருஷ்ணன் ரோகிணி ஊர்வசி குஷ்பு ரேவதி ராதிகா சரத்குமார் போன்றவர்கள்தான் முன்வரிசையில் நிற்கின்றனர்.

- Advertisement -

இதில் பல படங்களில் கதாநாயகனுக்கு அன்பான அழகான அமைதியான அம்மாவாக நடித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். நாடோடிகள் படத்தில் சசிக்குமாரின் அம்மாவாக வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு அம்மாவாக நான் மகான் அல்ல படத்தில் கார்த்திக்கு அம்மாவாக இப்படி பல படங்களில் நடித்திருப்பார்.

அம்மா நடிகையாக இருந்த லட்சுமி ராமகிருஷ்ணன் தனியார் டிவி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பங்கேற்றார். பலரது குடும்ப விவகாரங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களை நேரில் வரவழைத்து நடந்த சம்பவங்களை கேட்டு அதற்கான தீர்வுகளை சொல்வதுதான் அந்த நிகழ்ச்சியின் நோக்கம். ஆனால் இது கடும் விமர்சனத்தையும் லட்சுமி ராமகிருஷ்ணன் மீது ஏற்படுத்தியது.

- Advertisement -

ஒருமுறை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு பெண்ணை பார்த்து, என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா என்று லட்சுமி ராமகிருஷ்ணன் பேசிய அந்த ஒரு டயலாக் இப்பவும் டிரண்டிங்கில் உள்ளது. அதே போல் போலீசை கூப்பிடுவேன் என்று அவர் கோபமாக சொன்ன டயலாக்கும் இப்போதும் மீம்ஸ்களில் கலாய்க்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்த லட்சுமி ராமகிருஷ்ணன் மீண்டும் ரீ என்ட்ரி தருகிறார். நடிகர் ஜீவா நடித்து வரும் தகப்பன் படத்தில் நடிக்க அவர் கமிட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அம்மா கேரக்டர் இல்லை. இந்த படத்தில் ஒரு முக்கியமான நெகட்டிவ் கேரக்டரில் அவர் நடிப்பதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்