- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட்ரா சக்க அட்ரா சக்க… லியோ ரசிகர் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி - அலப்பரை...

அட்ரா சக்க அட்ரா சக்க… லியோ ரசிகர் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி – அலப்பரை கௌப்ப தயாராகும் விஜய் ரசிகர்கள்

- Advertisement -

லியோ படத்துக்கு ரசிகர் காட்சி அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இப்போது லியோ சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கிய தகவல் வெளியாகி உள்ளது. இது விஜய் ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. அதுமட்டுமின்றி, 19ம் தேதி முதல், 24ம் தேதி வரை தினமும் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சி நடத்திக் கொள்ளவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் சார்பில், லலித்குமார் தயாரிப்பில் விஜய் நடித்த லியோ படம் வரும், 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

பீஸ்ட், வாரிசு படங்கள் பெரிய வெற்றி பெறாத நிலையில், லியோ படத்தை விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர். அதுவும் கைதி, விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் என்பதால், எதிர்பார்ப்புகள் பலமடங்கு அதிகரித்துள்ளது. தரமான சம்பவங்களுடன் படம் வேற மாதிரி இருக்கும் என, ரசிகர்கள் அலப்பரை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 30ம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா நடப்பதாக இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டது. இது விஜய் ரசிகர்களை பலத்த ஏமாற்றத்தில் தள்ளியது. கடந்த 5ம் தேதி லியோ டிரெய்லர் வெளியான நிலையில், அதில் இடம் பெற்ற விஜய் பேசிய வசனம், பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி கோயம்போடு ரோகிணி தியேட்டரில் டிரெய்லர் பார்க்க வந்த ரசிகர்களின் வெறியாட்டத்தால், தியேட்டர் சூறையாடப்பட்டதும் பேசு பொருளாக மாறியது.

லியோ படத்துக்கு ரசிகர் காட்சி அனுமதி இல்லை என தமிழக அரசு தரப்பில், தெரிவிக்கப்பட்டதால், படக்குழுவும், ரசிகர்களும் பலத்த ஏமாற்றமடைந்தனர். எனினும், ஒருநாள் முன்னதாக பிரிமியர் ஷோக்களை நடத்தவும் திட்டமிடப்பட்டது. அதிலும் சில நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், பிரிமியர் ஷோக்களை நடத்தலாமா, வேண்டாமா எனவும் படத் தயாரிப்பாளர் லலித்குமார் குழப்பத்தில் இருந்ததாக பேசப்பட்டது.

இந்நிலையில், தற்போது லியோ படத்துக்கு சிறப்பு காட்சி நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. படம் ரிலீஸ் ஆகும் 19ம் தேதியன்று அதிகாலை 4 மணிக்கு ரசிகர் சிறப்பு காட்சி நடத்திக்கொள்ளவும், 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆறு நாட்களுக்கு காலை 7 மணி காட்சியை சிறப்பு ரசிகர் காட்சியாக நடத்தவும் அனுமதி வழங்கியுள்ளது. அதாவது லியோ படம் ரிலீஸ் ஆகும் 19ம் தேதி ஆறு காட்சிகளுக்கும், 20 முதல் 24ம் தேதி வரை 5 காட்சிகளும் நடத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியிருப்பது, விஜய் ரசிகர்களை கொண்டாட்டமடையச் செய்துள்ளது.

சற்று முன்