- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது முன்னணி இயக்குனர்கள் முதல்முறையாக தயாரித்த இந்த படங்கள் எல்லாம் இப்படி ஓட்டை உடைசலாய் இருக்கிறதா......

என்னது முன்னணி இயக்குனர்கள் முதல்முறையாக தயாரித்த இந்த படங்கள் எல்லாம் இப்படி ஓட்டை உடைசலாய் இருக்கிறதா… அட பாவத்த…

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரே நபர் பல்வேறு துறையில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருவது இங்கு காலம் காலமாக நடைபெற்று வருகிறது. சிலர் சோதனை முயற்சியாக, தான் இருக்கும் துறையிலிருந்து வேறு ஒரு துறைக்கும் அதில் காலூன்ற பார்ப்பார்கள். அதில் பெரிய அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அப்படியே திரும்பி விடுவார்கள்.

 

- Advertisement -

அதேபோல் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அதனை தொடர தயங்கி வருகிறார்கள். இதில் உதாரணத்திற்கு நாம் தனுஷின் வொண்டர் பார் நிறுவனத்தை கூறலாம். தான் உச்ச நடிகராக இருக்கும் போதே தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார் தனுஷ்.

 

- Advertisement -

வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை எதிர்நீச்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்தும் தனுஷின் வொண்டர் பார் நிறுவனத்தின் பெயரிலேயே வந்தன. இதே போல் தனது மாமனார் ரஜினிகாந்தை வைத்து காலா படத்தை தயாரித்தார் தனுஷ். ஆனால் சமீப காலமாக அவர் எந்தப் படத்தையும் தயாரிப்பதில்லை. அதற்கு பதில் இயக்கத்தில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

 

இதேபோல், விஜய் வைத்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த இயக்குனர் அட்லியும் முதல் முறையாக தமிழ் சினிமாவில் தயாரிப்பில் இறங்கினார். இதற்காக அவர் எடுத்துக் கொண்டது ஹாரர் படத்திற்கான கதைக்களம். ஜீவாவை வைத்து சங்கிலி புங்கிலி கதவை திற என்னும் திரைப்படத்தை அவர் தயாரித்தார்.

 

ஆனால் இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி எந்த ஒரு வரவேற்பையும் பெறவில்லை. இதே போல் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக தயாரிப்பில் இறங்கும்போது பலரும் இணையத்தில் பேச ஆரம்பித்தனர். தனது ஜி ஸ்குவாட் நிறுவனம் மூலம் அவர் முதல்முறையாக தயாரித்தது பைட் கிளப் திரைப்படம்.

 

உறியடி பட நாயகன் விஜயகுமார் நடித்த இந்தத் திரைப்படம், பெரிய அளவில் கல்லா கட்டவில்லை. இதேபோல் தயாரிப்பாளராக மாறி தற்போது சறுக்களை சந்தித்திருப்பவர் இயக்குனர் நெல்சன். அவரது தயாரிப்பில் கவின் நடித்த பிளடி பக்கர் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படி மூன்று இயக்குனர்களும் முதன் முறையாக தயாரித்த திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை என்று சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்