- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தப் படம் பிடிக்கலைன்னா என்ன செருப்பால கூட அடிங்க... மனம் வருந்தி பேசிய பிரபல இயக்குனர்...

இந்தப் படம் பிடிக்கலைன்னா என்ன செருப்பால கூட அடிங்க… மனம் வருந்தி பேசிய பிரபல இயக்குனர்…

- Advertisement -

சின்னத்திரையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமானவர் விக்னேஷ் கார்த்திக். தனது மிமிக்ரி திறமையால் கலக்கப்போவது யாரு உள்பட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று இருக்கிறார். அது இது எது நிகழ்ச்சியிலும் அவர் காமெடியனாக கலக்கியிருக்கிறார்.

விஜய் டிவியில் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விக்னேஷ் கார்த்திக் அதன்பிறகு, சன் டிவியில் சூரிய வணக்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த சேனலிலும் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற விக்னேஷ் கார்த்திக், மிமிக்ரி செய்து வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

- Advertisement -

இப்படியான சூழலில் நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேறிய அவர் குறும்படங்களை இயக்க ஆரம்பித்தார். இது அவருக்கு வெற்றி பார்முலாவையே கொடுத்தது. சின்ன சின்ன திரைப்படங்கள் பலவற்றை எடுத்து அதன் மூலம் தன்னை ஒழுங்குபடுத்திக் கொண்ட அவர், அங்கிருந்து வெள்ளித்திரைக்கு பயணம் ஆனார்.

ஆனால் அவரது முதல் திரைப்படம் அந்த அளவு சிறப்பாக வெற்றி வரவில்லை. ஏண்டா தலையில எண்ண வைக்கல என்னும் டைட்டிலுடன் அந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இது வெற்றி பெறாத சூழலில் அடுத்ததாக, திட்டம் இரண்டு என்னும் திரைப்படத்தை எடுத்திருந்தார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார்.

- Advertisement -

சஸ்பென்ஸ் திரில்லராக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஓடிடி யில் இந்த திரைப்படம் நேரடியாக ரிலீஸ் ஆகி இருந்தாலும், விமர்சன ரீதியாக இது வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தின் மூலம், விக்னேஷ் கார்த்திக் ஒரு இயக்குனராக அறியப்பட்டார். பிறகு, ஜிவி பிரகாஷை வைத்து அடியே என்னும் திரைப்படத்தை இயக்கினார்.

கலவையான விமர்சனத்தை பெற்ற இந்த திரைப்படம், இணையவாசிகளால் ஓரளவு பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹாட்ஸ்பாட் என்னும் படத்தை விக்னேஷ் கார்த்தி எடுத்திருக்கிறார். ஆந்தாலாஜி மூவியாக நான்கு கதைகளை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. படம் ரிலீஸ் ஆகி ஓரளவு நல்ல விமர்சனத்தையே பெற்றிருக்கும் சூழலில், அது ஒழுங்காக மக்களிடம் போய் சேரவில்லை. இந்நிலையில் படம் குறித்து பேசி இருக்கும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், இந்த திரைப்படம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும் என்றும், ஒருவேளை திரைப்படம் நன்றாக இல்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள் எனவும் வருத்தத்துடன் கூடியிருக்கிறார். இவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்