- Advertisement -
Homeபொழுதுபோக்குமார்ஷல் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கப் போவது அவரா? வெளியான லேட்டஸ்ட் தகவல் - அப்போ...

மார்ஷல் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கப் போவது அவரா? வெளியான லேட்டஸ்ட் தகவல் – அப்போ படம் வேற லெவலில் இருக்குமே…

- Advertisement -

நடிகர் கார்த்தி அடுத்ததாக மார்ஷல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் சென்னையில் நடந்து முடிந்த நிலையில் அடுத்தகட்டமாக இராமநாதபுரத்தில் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு 40 நாட்கள் ஷூட்டிங் நடத்தப்படுகிறது. இந்த படத்தை டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் டைரக்ட் செய்கிறார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் மெய்யழகன் படம் வெளியானது. அதைத் தொடர்ந்து வா வாத்தியார் என்ற படம் விரைவில் வௌியாக உள்ளது. இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 படப்பிடிப்பு நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், படத்தின் பட்ஜெட் ரூ. 190 கோடி வரை எகிறியதால் அந்த படம் 90 சதவீதம் கைவிடப்படும் நிலையில் உளளது. இதற்கு லோகேஷ் கனகராஜ் சம்பளம் ரூ. 75 கோடியாக உயர்ந்ததும் ஒரு முக்கிய காரணமாகும்.

- Advertisement -

இதையடுத்து நடிகர் கார்த்தி இப்போது மார்ஷல் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இராமநாதபுரத்தில் நாளை துவங்கும் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான பகுதிகளை அங்கு ஷூட்டிங் நடத்தவும் பிரமாண்ட செட்டும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர பகுதிகளிலும் கடல் பகுதியிலும் ஷூட்டிங் நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையே மார்ஷல் படத்தில் முதலில் மலையாள நடிகர் நிவின் பாலி முக்கிய கேரக்டரில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் வேறு ஒரு படத்தில் பிஸியாக நடித்து வருவதால் கால்ஷீட் இல்லை என்று மறுத்துவிட்டார் என தகவல் வெளியானது. அதே போல் நடிகர் ஆதி அதே கேரக்டரில் நடிக்கிறார் என கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால் அவரும் அந்த கேரக்டரில் நடிக்கவில்லை என்றும் தகவல் வெளியானது. இதற்கிடையே நடிகர் ஜீவாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அவர் முதலில் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது ஜீவாவும் அந்த கேரக்டரில் நடிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. நிவின் பாலி ஆதி மற்றும் ஜீவா 3 பேருமே மார்ஷல் படத்தில் கார்த்தியுடன் நடிக்கவில்லை.

ஆனால் இப்போது லேட்டஸ்ட் தகவலாக இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் அந்த முக்கிய வேடத்தில் நடிகர் வடிவேலு நடிப்பதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆரம்பத்திலேயே இந்த கேரக்டரில் நடிக்க வடிவேலுவிடம்தான் பேசப்பட்டதாகவும் அவர் மறுத்ததால்தான் மற்றவர்களை நடிக்க பேசப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் இப்போது வடிவேலுவிடம் பேசிய போது ஓகே சொல்லிவிட்டார் என்றும் தெரிய வந்துள்ளது. கார்த்தி வடிவேலு காம்போ வேற லெவலில் இருக்கும் என்று இப்போதே ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.

- Advertisement -

சற்று முன்