தமிழ் சினிமாவில் தற்போது இரண்டு பெரிய திரைப்படங்கள், வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. இந்த இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. இதில் விக்ரம் நடித்திருக்கும் வீரதீர சூரன் திரைப்படம் முதலாவதாக வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான பிரமோஷன் பணிகள் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளன.
இதேபோல் ஏப்ரல் பத்தாம் தேதி அஜித்குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதன் மூலம் மைத்திரி மூவிஸ் முதல்முறையாக தமிழ் சினிமாவிற்கு தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமாகிறது.
ரம்யா என்னும் கதாபாத்திரத்தில் வருகிறார் திரிஷா. இதுபோக பிரபு, யோகி பாபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அஜித் குமாரின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தில் அவரை, ஒரு பேன் பாய் தளத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார் என்பது அதன் டீசரை பார்க்கும் போதே தெளிவாக தெரிந்தது.
அதுமட்டுமல்லாமல் டீசரில் விண்டேஜ் அஜித்குமாரை காட்டி இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். வாலி பில்லா அமர்க்களம் வேதாளம் ரெட் என அத்தனை திரைப்படங்களின் அஜித்தையும் ஒரே டீசரில் பார்த்தது போல் இருந்ததாக ரசிகர்கள் சிலாகித்தனர். இந்த ட்ரெய்லரும் சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டானது.
இதனைத் தொடர்ந்து, குட் பேட் அக்லியிலிருந்து முதல் பாடல் வெளியானது. ஓ ஜி சம்பவம் என தொடங்கும் இந்தப் பாடல், சமூக வலைதளத்தில் வரவேற்பு பெற்று இருக்கிறது. அதில் ஜீவி பிரகாஷும், ஆதிக் ரவிச்சந்திரனும் போட்டி போட்டு பாடி இருக்கிறார்கள். எதிர்பார்த்ததைப் போலவே இந்த பாடலும் ரீச்சான சூழலில், படத்தின் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இதில் அர்ஜுன் தாஸ் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் படத்தின் மெயின் வில்லன் குறித்த தகவல் கசிந்து உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தில் மொட்டை கெட்டப்பில் இரட்டையர்கள் வந்திருப்பார்கள். அதில் ஒருவரான ரகுராம் தான் இந்த திரைப்படத்தின் வில்லன் என்று கூறப்படுகிறது. படத்தில் கேமியா ரோலில் சிம்ரன் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.





