- Advertisement -
Homeபொழுதுபோக்குரொம்ப நாளா தளபதி விஜய்க்கு இப்படி ஒரு பிரச்னை இருக்குதா?, டாக்டர்கள் கொடுத்த அட்வைஸ்...

ரொம்ப நாளா தளபதி விஜய்க்கு இப்படி ஒரு பிரச்னை இருக்குதா?, டாக்டர்கள் கொடுத்த அட்வைஸ் – ஒடம்ப பார்த்துக்குங்க நண்பா

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். சென்னையில் நடந்து வரும் ஷூட்டிங்கில் அவர் ரசிகர்கைள சந்தித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. கிளீன் ஷேவ் செய்து சின்ன பையன் போல அதில் காட்சி தருகிறார். ரசிகர்கள் அவரது இந்த தோற்றத்தை பார்த்து அசந்து போயிருக்கின்றனர்.

நடிகர் விஜய் துவக்கத்தில் இருந்தே உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுபவர்தான். உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என எப்போதும் அவரது தோற்றம் ஒரே மாதிரியாகவே இருக்கும். இப்போதும் அவர் இளமையாக காட்சி தர இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.

- Advertisement -

நீண்ட காலமாகவே இரவு 7 மணிக்குள் டின்னரை முடித்துவிடுவது விஜயின் வழக்கம். அதாவது இரவில் உணவு சாப்பிட்ட பின் 4 மணி நேரம் கழித்து உறங்குவதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஏனெனில் அதற்குள் சாப்பிட்ட உணவு ஜீரணமாகி விடும். அதனால் உடலில் அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு பிரச்னைகள் வராது என்பதுதான் இதன் கான்செப்ட்.

அதுமட்டுமின்றி ஹீரோவாக எப்போதும் நடிக்க விரும்புகிற நடிகர்கள் எப்போதுமே உடல் தோற்றத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். ரஜினி, கமல் போன்றவர்கள் 70 வயதுகள் என்ற நிலையிலும் ஹீரோக்களாக நடிக்க அவர்களது தோற்றம் மிக முக்கிய காரணம். தொப்பையும், கன்னச்சதைகள் உப்பிய நிலையிலும் இருந்தால் நிச்சயம் ஹீரோவாக திரையில் காண முடியாது.

- Advertisement -

அதனால் விஜய் தனது உடல் தோற்றத்தில் அதிக கவனம் செலுத்துகிறார். எனினும் அவருக்கும் வயதுக்கேற்ப சில உடல் ரீதியான பிரச்னைகளும், கோளாறுகளும் ஏற்படவே செய்யும். ஏனெனில் உடம்பும் உழைக்க உழைக்க ஒவ்வொரு நாளும்பழையதாகிக் கொண்டே போகும். முதுமைக்கான பிரச்னைகளும் வருவதை தவிர்க்க முடியாது.

இது பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்துள்ளது. பிரியமுடன் படத்தில் விஜய் நடித்த போது, அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் இனிமேல் அதிக எடையை நீங்கள் தூக்கவே கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். உடற்பயிற்சி கூடங்களில் முதலில் அதிக எடை இரும்பு தம்பில்ஸ், வெயிட்டிங் எடுத்துக் கொண்டிருந்த விஜய், டாக்டர்கள் அட்வைஸ் செய்த பிறகு குறைந்த எடை உபகரணங்களை பயன்படுத்துவதை வழக்கப்படுத்தி கொண்டார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இதை அவரே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்