- Advertisement -
Homeபொழுதுபோக்குமிஸ் திருநங்கை 2025 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால் திடீர் மயக்கம் ஆனது ஏன்? -...

மிஸ் திருநங்கை 2025 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால் திடீர் மயக்கம் ஆனது ஏன்? – டாக்டர்கள் சொன்னது என்ன? வெளியான புதிய தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். இதுதவிர விஷால் பிலிம் பேக்டரி என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். துப்பறிவாளன் 2 படத்தை அவரே நடித்து இயக்கும் முயற்சிகளிலும் அவர் ஈடுபாடு காட்டி வருகிறார்.

கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா ஆண்டுதோறும் மிக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இந்த விழாவில் ஏராளமான திருநங்கைகள் வந்து கலந்துக்கொள்கின்றனர். தற்போது நடந்து வரும் கூத்தாண்டவர் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக நேற்றிரவு மிஸ் திருநங்கை 2025 அழகிப் போட்டி நடத்தப்பட்டது. இந்த விழாவில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

- Advertisement -

அப்போது மேடை ஏறிய நடிகர் விஷால் அங்கிருந்த திருநங்கைகள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு இருந்த வயதில் மூத்த சில திருநங்கைகள் அவருக்கு ஆசிர்வாதம் வழங்கி பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது நடிகர் விஷால் திடீரென மேடையில் மயங்கி சரிந்து விழுந்தார். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பிறகு மேடையில் இருந்த கைதாங்கலாக அவரை கீழே இறக்கிய சிலர், அங்கிருந்த காரில் ஏற்றி உட்கார வைத்தனர். அங்கிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி நடிகர் விஷாலை காரில் அழைத்துச் சென்றார். அதன்பிறகு நடிகர் விஷால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்பு அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. இப்போது நடிகர் விஷால் நலமாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

நடிகர் விஷால் மேடையில் இருந்த போது மயங்கி விழ காரணம், அங்கு போதிய காற்றோட்டம் இல்லை. கூட்ட நெரிசலில் அவர் சிக்கியதால் மயக்கம் ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்ட நிலையில் இப்போது சில புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று முழுவதும் நடிகர் விஷால் எதுவுமே சாப்பிடாமல் இருந்திருக்கிறார். ஜூஸ் மட்டுமே குடித்திருக்கிறார். நீண்ட தூர பயணம், அங்கிருந்த மக்கள் கூட்டம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஷாலை மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு பெரிய உடல் நல பாதிப்புகள் எதுவும் இல்லை. சரியான நேரத்துக்கு சரியாக அவர் சாப்பிட வேண்டும் என்று மட்டுமே கூறியிருக்கின்றனர். உடல் எடை அதிகரிப்பு, டயட் காரணமாக பல ஆண்டுகளாக நடிகர் விஷால் அரிசி சாதம் சாப்பிடுவது இல்லை. டயட் என்ற பெயரில் குறைவான வெவ்வேறு வகை உணவுகளை அவர் எடுத்துக்கொள்வதால் உடல் பலவீனமே இந்த மயக்கத்துக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. சரியாக சாப்பிட்டால் இந்த பலவீனம் இருக்காது என்றும் டாக்டர்கள் நடிகர் விஷாலுக்கு அட்வைஸ் செய்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்