- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் போலவே பிரதீப் ரங்கநாதனும் தள்ளி போய் விட்டாரா? டிராகன் படம் ரிலீஸ் தேதியில் திடீர்...

தனுஷ் போலவே பிரதீப் ரங்கநாதனும் தள்ளி போய் விட்டாரா? டிராகன் படம் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம் – எல்லாம் அஜீத் பண்ற வேலைதான்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் வருகிற பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் என அதிகாரபூர்வமாக டிரெய்லர் விட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த தேதியில் மாற்றம் கிடையாது என்பதால், 2 ஆண்டுகளுக்கு பின் திரையில் அஜீத்குமாரை தரிசிக்க ஏகே ரசிகர்கள் தவம் இருக்கின்றனர். அவர்களை பொருத்தவரை பிப்ரவரி 6ம் தேதிதான் பொங்கல், தீபாவளி எல்லாமே.

வணங்கான் கேம் சேஞ்சர் படங்களுடன் விடாமுயற்சியும் ரிலீஸ் ஆக வேண்டிய சூழலில் திடீரென ரிலீஸை தள்ளி வைத்தது லைகா நிறுவனம். பாரமவுண்டன் பிக்சர்ஸ் நிறுவனம், பிரேக் டவுன் படத்தின் தழுவல்தான் விடாமுயற்சி என்பதால் அதற்கான என்ஓசி வழங்கும் விவகாரத்தில் படம் தள்ளிப் போனது.

- Advertisement -

இப்போது அந்த பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில் விடாமுயற்சி படம் ரிலீஸ் தேதி உறுதியாகி ரசிகர்களுக்கும் அறிவித்து விட்டனர். இந்த சூழலில் அஜீத்குமார் படம் வருவதால் தமிழ்நாட்டில் ஏராளமான தியேட்டர்களில் விடாமுயற்சி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அந்த நேரத்திலோ அதற்கு முந்தைய ஒரு வாரத்திலோ படங்கள் வந்தாலும், தியேட்டரில் இருந்தாலும் காணாமல் போய் விடும்.

அதனால்தான் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற காதல் படத்தை பிப்ரவரி 7ம் தேதி ரிலீஸ் செய்ய இருந்த நிலையில், அதை ஜனவரி 30ம் தேதி மாற்றினர். ஆனால் படத்தை பார்த்த உதயநிதி, பிரமாதமாக உள்ளது, இந்த படத்தை பிப்ரவரி 21ல் ரிலீஸ் செய்யுங்கள் என்று கூறியதால், அந்த படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 21ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் லவ்டுடே நாயகன் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் ரிலீஸ் தேதி பிப்ரவரி 14 என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. காதலை மையமாக கொண்ட இந்த படத்தை காதலர் தினத்தில் வெளியிடுவது என்று படக்குழு முடிவு செய்திருந்தது.

ஆனால் பிப்ரவரி 6ம் தேதி அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி ரிலீஸ் என்பதால், டிராகன் படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரி 21ம் தேதிக்கு தள்ளி வைத்து, அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதீப் ரங்கநாதன், தல வந்தா தள்ளி போய்தானே ஆகணும், பிப்ரவரி 21ம் தேதி டிராகன் ரிலீஸ் என்று அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்