- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத் படத்தை பின்னுக்கு தள்ளிய டிராகன்; 2வது படத்திலேயே கொழுத்த லாபத்தை அள்ளித் தந்த பிரதீப்...

அஜீத் படத்தை பின்னுக்கு தள்ளிய டிராகன்; 2வது படத்திலேயே கொழுத்த லாபத்தை அள்ளித் தந்த பிரதீப் ரங்கநாதன் – உங்களுக்கு சொன்னா புரியாது சார்…!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல படங்களை ரசிகர்கள் பெரிய வெற்றிப் படமாக்கி விடுவார்கள் என்பதற்கு கடந்தாண்டில் மகாராஜா லப்பர் பந்து போன்ற படங்கள் உதாரணமாக இருந்தன. அந்த வகையில் இப்போது பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து வசூலை வாரி குவித்துக்கொண்டிருக்கிறது.

கடந்த 21ம் தேதி டிராகன் படம் ரிலீஸானது. தொடர்ந்து 3 நாட்களில் ரூ. 50 கோடியை கடந்த நிலையில் இன்று வரை வசூல் ரூ. 75 கோடியை உலகளவில் கடந்து விட்டதாக தெரிய வந்துள்ளது. 6 நாட்களில் பிரதீப் ரங்கநாதன் போன்ற ஒரு அறிமுக நாயகன் 2வது படத்திலேயே இவ்வளவு பெரிய வசூலை கடந்திருப்பது என்பது தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

அதே போல் இந்த 6 நாட்களில் மட்டும் தமிழ்நாட்டில் டிராகன் படம் ரூ. 45 கோடி வசூலை செய்துள்ளது. அதாவது படம் ரிலீஸான ஓப்பனிங் நாளில் இருந்து தினமும் ரூ. 8 கோடி என்ற அளவுக்கு டிராகன் படம் தமிழ்நாட்டில் வசூல் செய்திருக்கிறது என்பது இதில் கவனிக்கத்தக்கது.

வழக்கமாக யாருடைய படமாக இருந்தாலும் முதல் நாள் ரிலீஸ் அன்று ஓப்பனிங் கலெக்‌ஷன் அதிகமாக இருக்கும். பிறகு வரும் நாட்களில் குறையும். வாரத்தின் கடைசி நாட்கள் சனி ஞாயிறு தினங்களில் வசூல் அதிகரிக்கும். பிறகு வரும் நாட்களில் குறைவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் டிராகன் படத்தை பொருத்த வரை சனி ஞாயிறு தினங்கள் மட்டுமின்றி தினமும் ஒரே மாதிரியான கலெக்‌ஷன் இருந்து வருகிறது. அதுவும் ரூ. 8 கோடி என்ற அளவில் நீடிக்கிறது.

- Advertisement -

இதே வேகத்தில் டிராகன் படம் ஓடினால், தினமும் வசூலித்தால் இந்த படம் தியேட்டர் ஷேர் ஆக மட்டுமே ரூ. 50 கோடிக்கு மேல் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 120 கோடி வசூலை கடக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் ரூ. 32 கோடிதான் ஷேர் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே படத்தை தயாரித்த வகையில் பெரிய லாபம் சம்பாதித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், இப்போது டிராகன் படத்தை தயாரித்த வகையிலும் மிகப்பெரிய லாபத்தை அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்