- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்னும் 2 மாதங்களில் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 ஆரம்பமாக போகுது - ...

இன்னும் 2 மாதங்களில் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 ஆரம்பமாக போகுது – கிராண்ட் ஓபன் லாஞ்ச் தேதி இதுதானா? குஷியான பிக்பாஸ் ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த 2017ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 20 முதல் 25 போட்டியாளர்களை வரை பங்கேற்கும் இந்த ரியாலிடி ஷோ நிகழ்ச்சியில் 100 நாட்களுக்கு மேல் வீட்டுக்குள் தங்கியிருக்கும் போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளில் ஜெயித்து டைட்டில் வின்னராக வெற்றி பெறுவது வழக்கமாக உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டில் துவங்கிய இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் துவங்கி வைத்தார். கடந்த 2023ம் ஆண்டு வரை 7 ஆண்டுகள் நடிகர் கமல்ஹாசனே பிக்பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். பிறகு அவர் விலகிய நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக தொகுத்து வழங்கி வருகிறார்.

வருகிற பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் நடிகர் விஜய் சேதுபதியே 3வது ஆண்டாக தொடர இருக்கிறார். இதுவரை 9 சீசன்களில் ஆரவ், ஆரி அர்ஜூன், ராஜூ, ரித்விகா, முத்துக்குமரன், முகின், முகமது அஸீம், அர்ச்சனா கடந்த ஆண்டில் திவ்யா கணேஷ் ஆகிய 9 பேர் டைட்டில் வின்னர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

வழக்கமாக அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஜனவரி மாதம் 2வது வாரத்தில் நிறைவடைவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த முறை வருகிற செப்டம்பர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் 2வது வாரத்தில் இந்த சீசன் நிறைவடைய உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

வழக்கமாக தீபாவளி கிறிஸ்துமஸ் ஆங்கில புத்தாண்டு மற்றும் தை பொங்கல் பண்டிகை போன்றவற்றை பிக்பாஸ் வீட்டுக்குள் தான் போட்டியாளர்கள் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஏனெனில் அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் துவங்கினால் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வரும் இந்த பண்டிகைகளை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டாடும் சூழல் உருவாகிறது.

ஆனால் இந்த முறை செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் அதாவது செப்டம்பர் 6ம் தேதி பிக்பாஸ் சீசன் 10 கிராண்ட் ஓபனிங் லான்ச் செய்ய விஜய் டிவி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் கசிந்துள்ளது. ஆனால் இதுவரை இது உறுதி செய்யப்படவில்லை. எனினும் செப்டம்பர் மாதம் முதல் வாரம் துவங்கினால், டிசம்பர் மாதம் 2வது வாரத்துக்குள் 100 நாட்களை இந்த நிகழ்ச்சி கடந்து நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்