- Advertisement -
Homeபொழுதுபோக்குமூக்குத்தி அம்மன் 2 படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க மறுத்த 2 தமிழ் பட ஹீரோக்கள்?...

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க மறுத்த 2 தமிழ் பட ஹீரோக்கள்? – கன்னட நடிகர் துனியா விஜய்க்கு கிடைத்த வாய்ப்பு!

- Advertisement -

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாகிறது. ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் மீண்டும் மூக்குத்தி அம்மன் கேரக்டரில் நடிகை நயன்தாரா நடிக்கிறார். ஹிப்ஆப் ஆதி இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

ஏற்கனவே நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்த படம்தான் மூக்குத்தி அம்மன். 2021ம் ஆண்டில் வெளியான இந்த படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக இப்போது அதே பெயரில் 2ம் பாகமாக இந்த படம் உருவாகிறது. ஆனால் அந்த படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் இருக்க வாய்ப்பில்லை.

- Advertisement -

இந்த படத்தின் நயன்தாராவுடன் அபிநயா இனியா யோகிபாபு கருடா ராம் சிங்கம்புலி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் வில்லன் கேரக்டரில் கன்னட நடிகர் துனியா விஜய், அம்மனுக்கு சமமான மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிகை ரெஜினா கசாண்ட்ராவும் இந்த படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கின்றனர்.

இன்று சென்னையில் பிரசாத் ஸ்டுடியோவில் நடந்த மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படபூஜை மற்றும் துவக்க விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் சுந்தர் சி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக குஷ்பு மீனா ரவி மோகன் உள்பட படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் படக்குழுவினரும் கலந்துக்கொண்டனர்.

- Advertisement -

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க ஏற்கனவே 2 தமிழ் நடிகர்களிடம் இயக்குனர் சுந்தர் சி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அதில் என்னை அறிந்தால் இட்லி கடை படங்களில் வில்லனாக நடித்துள்ள நடிகர் அருண் விஜயிடம் பேசிய நிலையில், அவர் கேட்ட சம்பளம் கட்டுப்படி ஆகாததால் சுந்தர் சி அதை ஏற்கவில்லை.

அடுத்து மிருகம் படத்தில் அறிமுகமான நடிகர் ஆதி. நடிகை நிக்கி கல்யாணியின் கணவர். ஈரம் படத்தின் 2ம் பாகமாக நேற்று வெளியான சப்தம் படத்தின் நாயகன் ஆதியிடமும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் வில்லனாக நடிக்க சுந்தர் சி பேசியிருக்கிறார். அவரும் சம்மதிக்காத நிலையில்தான் இந்த படத்தில் கன்னட நடிகர் துனியா விஜய் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்