- Advertisement -
Homeபொழுதுபோக்குவாங்கிய விலையை குறைக்க வேண்டும், ஜனநாயகன் படத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட திடீர் முடிவு - எப்படி...

வாங்கிய விலையை குறைக்க வேண்டும், ஜனநாயகன் படத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட திடீர் முடிவு – எப்படி சமாளிக்கப் போறாங்களோ… தளபதி ரசிகர்கள் விரக்தி!

- Advertisement -

இயக்குனர் எச் வினோத் டைரக்சனில் உருவான நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற 9ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படம் தமிழ்நாட்டில் 650 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் வெளியிட வினியோகஸ்தர்கள் அதிக விலை கொடுத்து உரிமம் பெற்றுள்ளனர்.

அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் ஏரியா வாரியாக பிரித்து பிரித்து ஜனநாயகன் படம் வெளியீட்டு உரிமையை விநியோகஸ்தர்களுக்கு, ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் ரூ. 105 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. இது நல்ல கணிசமான லாபமாகவும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஜனநாயகன் படத்தை தியேட்டர்களில் வெளியிட உரிமம் பெற்ற விநியோகஸ்தர்கள் சமீபத்தில் ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்தி பேசி இருக்கின்றனர். அந்த கூட்டத்தில் பேசியவர்கள், ஜனநாயகன் படம் மட்டுமே பொங்கலுக்கு வருகிறது என்றுதான் பல கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கினோம்.

இப்போது 9ம் தேதி ஜனநாயகன் படம் வெளியாகும் நிலையில் அடுத்த நாளே 10ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் வெளிவருகிறது.இதனால் 10ம் தேதியில் இருந்து தினசரி 4 காட்சிகளில் 2 காட்சிகளை பராசக்தி படத்துக்கு ஒதுக்க வேண்டிய நிலை தியேட்டர்களில் உருவாகி உள்ளது. இதனால் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு, எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது.

- Advertisement -

ஏனென்றால் பராசக்தி படத்துக்கு 2 காட்சிகளை ஒதுக்கினால் விஜய் படத்துக்கான வருமானம் பாதியாக குறைந்து போகும். நாம் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. அதனால் ஜனநாயகன் படத்தை தியேட்டர்களில் வெளியிட வாங்கிய விலை இப்போது தயாரிப்பு நிறுவனம் குறைக்க வேண்டும் என்று கலந்து பேசி முடிவு செய்திருக்கின்றனர்.

இதுகுறித்து விரைவில் மீடியேட்டர் மூலமாக கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடமும் அவர்கள் பேசவும் உள்ளனர். இது ஜனநாயகன் படத்துக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பராசக்தி படம் 10ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதால் இப்படி ஒரு பிரச்னை விஜய் படத்துக்கு ஏற்பட்டது தளபதி ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்