- Advertisement -
Homeபொழுதுபோக்குலெஜெண்ட் சரவணனுடன் நான் இயக்கப் போகும் திரைப்படம் இந்த ஜானரில்தான் இருக்கும்... கதையைப் பகிர்ந்த கருடன்...

லெஜெண்ட் சரவணனுடன் நான் இயக்கப் போகும் திரைப்படம் இந்த ஜானரில்தான் இருக்கும்… கதையைப் பகிர்ந்த கருடன் பட இயக்குனர்…

- Advertisement -

தமிழகத்தில் பிரபல நிறுவனங்களை நடத்தி வரும் உரிமையாளர்கள், தங்கள் கடையின் விளம்பரத்திற்காக தாங்களே நடிப்பது என்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சென்னை உட்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் துணிக்கடை நடத்தி வரும் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் இதே பாணியை பின்பற்றினார்.

 

- Advertisement -

வெறும் விளம்பரத்திலேயே, முக்கிய ஹீரோயின்களுடன் நடித்து ஆச்சரியப்பட வைத்தார் சரவணன். அது மட்டுமல்லாமல் பட விழாக்களிலும் அவர் கலந்து கொள்ள ஆரம்பித்தார். தனது மேக்கப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த அவர், ஒவ்வொரு நிகழ்ச்சியும் பளிச் என காட்சியளித்தார். இந்த சமயத்தில்தான் வெள்ளித்திரையில் தோன்றும் விபரீத முடிவையும் சரவணன் எடுத்தார்.

 

- Advertisement -

அதன்படி ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவானது தி லெஜன்ட் திரைப்படம். மிகப்பெரும் பொருட்செலவில், ஒவ்வொரு காட்சியும் கண்ணாடி போல் மிளிர கதை படமாக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் ரிலீஸ் ஆனது. சிவாஜி திரைப்படத்தை தழுவியே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதாக அப்போது கமெண்ட் அடிக்கப்பட்டது.

 

அது மட்டுமல்லாமல், லெஜன்ட் சரவணனுக்கு நடிப்பே வரவில்லை என்று பலரும் கிண்டல் அடிக்க ஆரம்பித்தனர். விமர்சன ரீதியாக படம் பெரிய வரவேற்பை பெறாததால் தோல்வி அடைந்தது. அதுமட்டுமல்லாமல் இணையத்திலும் லெஜெண்ட் சரவணன் ட்ரோல் மெட்டீரியல் ஆனார். அவரை ரசிகர்கள் பயங்கரமாக கலாய்த்தனர். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை லெஜன்ட் சரவணன்.

 

அடுத்த திரைப்படத்தை எப்படியும் ஒரு முன்னணி இயக்குனர் தான் சேர வேண்டும் என்பதில் லெஜன்ட் சரவணன் உறுதியாக இருந்தார். இப்படியான சூழலில் தான் அவர் இயக்குனர் துரை செந்தில்குமார் உடன் சேர்ந்து இருக்கிறார். சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல் காக்கி சட்டை, தனுசை வைத்து கொடி, பட்டாசு ஆகிய திரைப்படங்களை எடுத்தவர் துரை செந்தில்குமார். அண்மையில் அவர் இயக்கிய கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

 

இந்த சூழலில் துரை செந்தில்குமார் உடன் லெஜெண்ட் சரவணன் சேர்ந்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் லெஜெண்ட் சரவணன் லுக்கும் படத்தில் மிரட்டலாக இருக்கிறது. இப்படம் குறித்து பேசி இருக்கும் துரை செந்தில்குமார், திரில்லர் பாணியில் இது எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். கருடன் பட வேலைகளை முடித்த பிறகு, லெஜன்ட் சரவணனிடம் கதை கூறியதாகவும், அது அவருக்கு பிடித்துப் போனது என்றும் தெரிவித்திருக்கிறார். அண்மையில் வெளியான கருடன், மகாராஜா போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றதன் மூலம் ஒரு படத்திற்கு திரைக்கதையே முக்கியமானது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்