- Advertisement -
இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் விஜய். இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்யப்பட வேண்டும். இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். எம்எல்ஏவோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை பவர் சென்டர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருக்கிறார்.





