- Advertisement -
ஐஆர்எஸ் அதிகாரி தோ சமய முரளி இயக்கத்தில் சுங்கத்துறை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள அதிரடி கிரைம் திரில்லர் திரைப்படம் எனிமி ஆப் த ஸ்மக்ளர். அவர் விசாரித்த பல சுங்கத்துறை வழக்குகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனை கதையாக இது உருவாகியுள்ளது. கடத்தல் நிழல் உலகம் மற்றும் சுங்கத்துறையின் செயல்பாடுகளை சுவாரசியமான சினிமா மொழியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு நாட்டின் பொருளாதாரம் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு வேலையில் சுங்கத்துறை வகிக்கும் முக்கிய பங்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த படத்தின் நோக்கம் என்று ஐஆர்எஸ் அதிகாரி இயக்குனர் சமயமுரளி கூறியிருக்கிறார். இந்த படம் வருகிற 30ம் தேதி திரைக்கு வருகிறது.





