கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான படம் எந்திரன். ரஜினிகாந்த் நடித்த இந்த படத்தின் கதையை திருடி பயன்படுத்தியதாக ஷங்கர் மீது புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை கடந்தாண்டில் இயக்குனர் ஷங்கரின் 11.10 கோடி ரூபாய் மதிப்புலான சொத்துக்களை தற்காலிகமாக முடக்கியது. பனாமா வழியாக பண மோசடி மற்றும் காப்புரிமை மீறல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த முடக்கம் செய்யப்பட்டதாக ஈடி துறை தெரிவித்தது.
இதனை எதிர்த்து இயக்குனர் ஷங்கர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், காப்புரிமை தொடர்பான தனிநபர் மோதலில் ஈடி தலையீடு செய்ய இயலாது. எந்தவித பணம் பரிமாற்ற முறைகேடும் இல்லாத நிலையில் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கை சட்டவிரோதம் என்று ஷங்கர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் ஈடி வழங்கிய சொத்துகள் முடக்கம் உத்தரவு போதிய ஆதாரம் இன்றி திடீரென அமல்படுத்தப்பட்டது.
மேலும் இது இயக்குனர் ஷங்கரின் தொழில் மற்றும் தனிப்பட்ட நற்பெயருக்கு கேடு விளைவிப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஈடிக்கு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஈடி துறையினருக்கு மேலும் விவரங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என வக்கீல்கள் கோரினர்.
இந்த கோரிக்கையை ஏற்று வருகிற ஜூன் 15ம் தேதி வரை ஈடி உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சினிமா துறையில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கு மீதான விசாரணை, இயக்குனர் ஷங்கரின் எதிர்கால திரையுலக பயணத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிய வந்துள்ளது. ஷங்கர் மீது நீதித்துறை எடுத்த நடவடிக்கை அவரது தொழில் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவு இயக்குனர் ஷங்கருக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது. வருகிற ஜூன் 15ம் தேதியன்று இந்த வழக்கு நடைபெற உள்ளது. அந்த நாள் நடைபெறும் விசாரணை வழக்கின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக உள்ளது. எனவே இந்த நாளில் நடக்கும் விசாரணையை பொருத்துதான் இந்த வழக்கில் அடுத்தகட்ட நகர்வுகள் இயக்குனர் ஷங்கருக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
வழக்கமாக அட்லி வெங்கட்பிரபு சுந்தர் சி லோகேஷ் கனகராஜ் போன்ற கமர்ஷியல் இயக்குனர்கள் தான் இதுபோன்ற திருட்டு கதைகளை படமாக்குவார்கள். அந்த வரிசையில் இயக்குனர் ஷங்கர் போன்ற சிறந்த படைப்பாளிகளும் நிற்பதுதான் ரசிகர்களை மிகவும் அதிருப்தியடைய செய்திருக்கிறது. எனினும் ஜூன் 15ல் நடக்கும் இந்த வழக்கு விசாரணை ஷங்கரின் சினிமா பயணத்தில் பெரிய மாற்றத்தை தரப்போகிறது.





