- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமாருடன் ஜோடி சேர மறுக்கும் பிரபல நாயகிகள், விஜய் என்றால் மட்டும் உடனே ஓகே -...

அஜீத்குமாருடன் ஜோடி சேர மறுக்கும் பிரபல நாயகிகள், விஜய் என்றால் மட்டும் உடனே ஓகே – ஒருவேளை அந்த விஷயம்தான் காரணமோ?

- Advertisement -

நடிகர் விஜய், நடிகர் அஜீத்குமார் இருவருமே தமிழ் சினிமாவில் சம அந்தஸ்து உள்ள முன்னணி நடிகர்களாக தான் இருக்கின்றனர். சம்பளத்தில் சற்று முன்னும் பின்னுமாக இருந்தாலும் அஜீத்குமார், விஜய் இருவருக்குமே ரசிகர்களின் ஆதரவும், வரவேற்பும் மிக அதிகமாகவே இருந்து வருகிறது. விஜய், அஜீத் படங்களை இயக்கவும், தயாரிக்கவும் தமிழ் சினிமா துறையில் கடும்போட்டி நிலவுகிறது.

நடிகர் விஜய், அஜீத்குமார் இருவருமே 50 வயதுகளை நெருங்கி விட்டனர். இந்நிலையில் நடிகர் விஜய் தலைமுடி கொட்டிய நிலையில், டோபா விக் பயன்படுத்துவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அது உண்மையா, பொய்யா என்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. ஆனால் படங்களில் அவர் டோபா விக் பயன்படுத்துவது, படத்தில் நடிக்கும் கேரக்டருக்கானது என்றும் தெரிய வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு, கவுண்டமணி, ஆனந்தராஜ், கார்த்திக், செந்தில், கிஷோர், கிட்டி, மைக் மோகன் என பிரபல நடிகர்கள் பலரும் தலையில் முடி இல்லாததால் பல ஆண்டுகளாகவே விக் பயன்படுத்தி வருகின்றனர். ஏனெனில் தலையில் முடி இல்லாமல் அவர்களை பொது இடங்களில் ரசிகர்கள் பார்த்தால், தங்களை பற்றிய இமேஜ் மாறிவிடும் என்ற அச்சம்தான் இதற்கு காரணம்.

முக்கிய நடிகர்களான கார்த்திக், கவுண்டமணி, செந்தில், சத்யராஜ் போன்ற ஒரு சிலர், படப்பிடிப்பு தவிர மற்ற நேரங்களில் தொப்பி அணிகின்றனர். ரஜினிகாந்த் போன்ற சிலர், அப்படியே இயல்பாக விட்டுவிடுகின்றனர். பிரபு, ஆனந்தராஜ், மைக் மோகன் போன்றவர்கள் எப்போதும் விக் அணிந்தே காணப்படுகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விஜய் உடன் நடிகை சமந்தா தெறி, மெர்சல், கத்தி ஆகிய 3 படங்களில் நடித்துள்ளார். சர்க்கார், பைரவா ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் நடித்துள்ளனர். ஆனால் விஜய் உடன் சமந்தா, கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை. அதே போல் ஆண்ட்ரியா, அமலாபால், ஸ்ரேயா சரண் போன்றவர்களும் அஜீத்குமாருடன் இதுவரை நடிக்கவில்லை.

அதே போல் போனிகபூர் – ஸ்ரீதேவி மகளான ஜான்வி கபூரும் அஜீத்குமாருடன் நடிக்க கேட்ட போது, அவரது தந்தை போனிகபூரே வற்புறுத்தியும் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்துள்ளார். இப்போது சூர்யாவுடன் ஒரு படத்தில் அவர் நடிக்கிறார். இப்படி அஜீத்குமாருடன் பல நடிகைகள் நடிக்க மறுக்க காரணம், அவர் படத்தில் வெள்ளைமுடி தலையுடன் இருப்பதுதான். தலைக்கு டை அடிக்காமல், விக் பயன்படுத்தாமல் அவர் நடிப்பதால், அவருக்கு ஜோடியாக நடித்தால், தங்களது இளமை நாயகி இமேஜ் போய்விடுமே என்ற அச்சத்தில் அவர்கள் நடிக்க மறுப்பதாக தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்