ஒரு திரைப்படம் என்பது பல பேருடைய கூட்டுமுயற்சியால் தான் உருவாக்கப்படுகிறது. தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் இசையமைப்பாளர் ஒளிப்பதிவாளர் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் இதில் ஒரு படம் உருவாக இரவு பகல் பாராமல் உழைத்து அந்த படத்தை திரைக்கு கொண்டு வருகின்றனர்.
ஆனால் அந்த படத்தின் கேப்டனாக இருப்பவர் தயாரிப்பாளரோ ஹீரோவோ இசையமைப்பாளரோ அல்ல. ஒரு திரைப்படத்தின் கேப்டன் என்பவர் அந்த படத்தின் டைரக்டர் தான். ஒரு படத்தின் மாபெரும் வெற்றிக்கும் படுதோல்விக்கும் முழு பொறுப்பு அந்த படத்தை இயக்கிய டைரக்டர்தான் என்றால் அது மிகையல்ல.
கேஜிஎஃப் கேஜிஎஃப் படங்களின் மூலம் ராக்கி பாய் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் யஷ் நடித்த படம் டாக்ஸிக். இந்த படத்தில் கியாரா அத்வானி நயன்தாரா ருக்மணி வசந்த் ஹூமா குரேஷி என முன்னணி நட்சத்திர நாயகிகள் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தை டைரக்ட் செய்தவர் நடிகை கீது மோகன்தாஸ். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர்.
தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். நடிகர் கமல்ஹாசன் தயாரித்த நளதமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நாயகியாகவும் கீது மோகன்தாஸ் நடித்திருந்தார். டாக்ஸிக் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று ஆசையாக சென்ற ரசிகர்களுக்கு ஆளை விடுங்கடா சாமி என்கிற அளவில் ஒரு காட்டு மொக்கை படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் கீது மோகன்தாஸ்.
ஹை லெவல் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிட்டு படம் என்று திரை விமர்சகர்கள் விமர்சித்த நிலையில் அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி எச்சரித்துள்ளது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம். இதற்கிடையே டாக்ஸிக் பட இயக்குனர் முன்பு தந்த ஒரு நேர்காணலில் அவர் பேசிய ஒரு விஷயம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் இயக்குனர் கீது மோகன்தாஸ் கூறியிருப்பதாவது, நான் ஒன்றை எழுதுவேன். வேறொன்றை ஷூட் செய்வேன். இன்னொன்றை எடிட் செய்வேன். படம் வந்துவிடும். எனக்கு சந்தோஷமாகிவிடும். நான் ஸ்கிரிப்ட் படி படம் எடுத்ததே இல்லை. என் அடுத்த படத்திற்காக தயாரிப்பாளர்களை சந்தித்து வருகிறேன். நீங்கள் வாசிக்கும் கதை படமாக வராது என்பதை மட்டும் அவர்களிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன் என்று கீது மோகன்தாஸ் அந்த பழைய நேர்காணலில் கூறியிருக்கிறார். டாக்ஸிக் படம் மோசமான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்த லட்சணத்தில் படம் எடுத்தால் எப்படி நன்றாக இருக்கும்? என்று ரசிகர்கள் கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.





