- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜா இசையமைத்த ஆயிரக்கணக்கான பாடல்கள் ரசிகர்களுக்கு பிடிக்கும் - ஆனா இசைஞானிக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு...

இளையராஜா இசையமைத்த ஆயிரக்கணக்கான பாடல்கள் ரசிகர்களுக்கு பிடிக்கும் – ஆனா இசைஞானிக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு எது தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையின் அடையாளமாக விளங்குபவர் இளையராஜா. அதனால் இசைஞானி என்று ரசிகர்களால் அன்று முதல் இன்று வரை கொண்டாடப்படுகிறார். 82 வயதுகளை கடந்த நிலையில் இன்னும் அவரே பாடல் எழுதி இசையமைத்து பாடி வருகிறார். சமீபத்தில் வெளியான விடுதலை 2 படத்தில் தெனம் தெனமும் உன் நெனைப்பு என்ற இளையராஜாவின் பாடல் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதுவரை தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல மொழிகளில் 1300க்கும் மேற்பட்ட படங்களில் பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்த இளையராஜா இப்போதும் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அவ்வப்போது தனது இசையில் உருவான பாடல்களை தனது படங்களில் பயன்படுத்துவோருக்கு காப்பிரைட் கேட்டு கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்து வருகிறார்.

- Advertisement -

இதற்கிடையே தனக்கு மிகவும் பிடித்தமான பாடல் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இசைஞானி இளையராஜா கூறியதாவது, இந்த இளையராஜா உருவாகி இருக்க காரணம் ஒரே ஒரு பாட்டுதான். இதை எத்தனையோ மேடைகளில் நான் சொல்லி இருக்கிறேன். நான் ஸ்கூலில் படிச்சிட்டு இருந்த காலத்துல கவியரசு கண்ணதாசன் அந்த பாட்டை அவங்க எழுதினாங்க என்பதே அப்போது எனக்கு தெரியாது.

ஆனால் எம்எஸ் விஸ்வநாதன் சார் மியூசிக் என்பது மட்டும் எனக்கு அப்போதே தெரியும். எந்த மோடிவேஷனும் இல்லாத காலகட்டம் அது. படிக்க வேண்டிய நேரத்தில் நன்றாக படிக்க வேண்டும் என்று மட்டுமே நினைப்பேன். எதுக்குன்னு கேட்டீங்கன்னா அது தெரியாது. நல்லா படிக்கணும். அவ்வளவுதான்.

- Advertisement -

டாக்டர் ஆகவா, இல்லே லாயர் ஆகவா இல்லே அதெல்லாம் தெரியாது. ஆனா நல்லா படிக்கணும். அவ்வளவுதான். அப்படியே போயிட்டு இருப்பேன். வந்துட்டு இருப்பேன். அப்போ அங்க வந்து கிராமத்துல ஸ்பீக்கர் ஷெட்டுல அங்கங்கே பாடும் இல்லே. சில கல்யாண வீடுகளில் அதெல்லாம் போடுவாங்க.

அதுல வந்த ஒரு பாடல் மாலைப் பொழுதில் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி என்ற பாடல்தான் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். அதில் இளமை எல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம் தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம் என்ற வரிகளை நான் ரொம்பவும் விரும்பி ரசிப்பேன் என்று இசைஞானி இளையராஜா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்