- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படத்தின் இசை விழாவில் அரசியல் பேசணுமா, படத்தை பத்தி பேசணுமா - விஜய்...

லியோ படத்தின் இசை விழாவில் அரசியல் பேசணுமா, படத்தை பத்தி பேசணுமா – விஜய் மக்கள் இயக்கத்தினர் திரள்வதால் விஜய்க்கு வந்த புது சிக்கல்

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த லியோ படம் அடுத்த மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்னதாக வரும் 30ம் தேதி, லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள நேரு உள்விளைாட்டு அரங்கில் நடக்க, ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன, இவ்விழாவை, ஒரு மாநாடு போல நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக, இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

ஏனெனில், லியோ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க படத்தில் நடித்த நடிகர், நடிகையர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், இப்படத்தில் பணிசெய்த ஊழியர்கள் தவிர, மற்ற யாருக்கும் இவ்விழாவில் கலந்துகொள்ள அனுமதி இல்லை. குறிப்பாக, சன்பிக்சர்ஸ் தயாரிப்பு படம் என்பதால் சன் டிவி தவிர, மற்ற மீடியாக்களுக்கு இந்நிகழ்ச்சியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில், இந்த முறை விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே முன்னுரிமையும், முக்கியத்துவமும் தரப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து வரும், விஜய் மக்கள் இயக்கத்தினர் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லியோ இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

நேரு உள்விளையாட்டு அரங்கம், 8 ஆயிரம் பார்வையாளர்கள் இருக்கும் இடவசதியை கொண்டிருக்கிறது. இதில் மேடை பகுதியை தவிர்த்தால், 6 ஆயிரம் பேர் வரை, அரங்கில் அமர இடவசதி உள்ளது. இதில் 5 ஆயிரம் பேர் விஜய் மக்கள் இயக்கத்தினர் எனில், லியோ படம் சார்ந்த ஆயிரம் பேர் மட்டுமே, அரங்கினுள் அனுமதிக்கப்படுவர் எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில், 234 தொகுதிகளில் இருந்தும் விஜய் மக்கள் இயக்கம் சார்ந்த முக்கிய நிர்வாகிகள், இயக்கத்தின் அணிகள் சார்ந்த நிர்வாகிகள் என 20 பேர் வீதம், 5 ஆயிரம் பேர் வரை சென்னைக்கு வரவழைக்கப்படுகின்றனர். ஒவ்வொரு தொகுதிக்கும், இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள 20 டிக்கெட் என ஒதுக்கி தரப்பட்டுள்ளது.

லியோ இசை வெளியீட்டு விழா, 80 சதவீத ரசிகர்கள் பங்கேற்கும் மாநாடு போல நடக்க உள்ளதால், இந்த விழாவில் விஜய் அரசியல் பேச போகிறாரா, அல்லது சினிமா பற்றி பேச போகிறாரா, அல்லது வழக்கம் போல ரசிகர்களுக்கு கதை சொல்லி அட்வைஸ் பண்ண போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக இவரது விழா பேச்சு, சன்டிவியில் ஒளிபரப்பாகும் என்பதால் ஆளுங்கட்சி குறித்தும் அடக்கி வாசிக்க வேண்டும். அரசியல் பேசாவிட்டால், விஜயை எதிர்கால அரசியல் தலைவராக எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களும் ஏமாற வாய்ப்புள்ளது. இசை விழாவில், விஜய் என்ன பேசுவது என்பதில், இப்படி ஒரு இடியாப்ப சிக்கல் ஏற்பட்டுளளது.

சற்று முன்