- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தின் பிரமாண்ட காட்சிகளா? -சிம்பு...

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தின் பிரமாண்ட காட்சிகளா? -சிம்பு பார்த்த வேலையால் நொந்து போன ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் சிலம்பரசன், குழந்தை நட்சத்திரமாக அவரது அப்பா டி ராஜேந்தர் இயக்கிய பல படங்களில் நடித்தவர். பிறகு வளர்ந்து இளைஞரான பின் பல படங்களில் நடித்தார். அதில் பல படங்கள் வெற்றி பெற்ற நிலையில், இப்போது தனது 48வது படத்தில் நடிக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை, இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.

நடிகர் சிலம்பரசன் நடிப்பில், வெங்கட்பிரபு டைரக்ட் செய்த மாநாடு படம், சிம்புவுக்கு கம்பேக் படமாக அமைந்தது. பெரிய ஹிட் கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு வந்த வெந்து தணிந்தது காடு மற்றும் பத்துதல படங்கள் பயங்கர ஏமாற்றத்தை தந்தன. அதிலும் பத்துதல படம் மிக மோசமான எதிர்மறை விமர்சனங்களை பெற்றது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் மிக ஆவலாக, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், சிம்பு நடிக்கும் 48வது படத்தை மிகுந்த ஆர்வமாக எதிர்பார்த்து இருக்கின்றனர். இதில் கதாநாயகன் – வில்லன் என டபுள் ரோல் செய்யும் சிம்புவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 2ம் தேதி வெளியானது. இது பெரிய அளவில் ரீச் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதே நாளில் நடிகர் விஜய், தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டதால், சிம்பு பர்ஸ்ட் லுக் போஸ்டர் காணாமல் போனது.

இதற்கிடையே, நடிகர் சிம்புவுக்கும், சரத்குமார் மகள் வரலட்சுமிக்கும் விரைவில் திருமணம் நடக்கும் சூழல் உருவாகி இருப்பதாகவும், இரு வீட்டாரும் விரைவில் பேசி முடிவு செய்ய இருப்பதாகவும் ஒரு தகவல் அடிபட்டு வருகிறது. இதில் சரத்குமார் மனைவி ராதிகா, டி ராஜேந்தர் மனைவி உஷா ஆகியோருக்கு அதிருப்தி இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் டி ராஜேந்தரும், சரத்குமாரும் சம்பந்திகளாக அதிக ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழலில் நடிகர் சிம்பு, சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் பாகுபலி படத்தில் இருந்தது போன்ற பிரமாண்டமான சில காட்சிகள் இருந்தன. இதை பார்த்த சிம்பு ரசிகர்கள் அசந்து போய்விட்டனர். இது சிம்பு தற்போது நடிக்கும் தேசிங்கு பெரியசாமியின் படத்தில் இடம்பெறும் காட்சிகள் என்று, சமூக வலைதளங்களில் அந்த வீடியோவை வைரலாக்கினர். 1000 கோடி ரூபாய்க்கு மேல் படம் வசூலிக்கும் என்றும் பாராட்டுகளை குவித்தனர்.

ஆனால் இப்போது அந்த வீடியோ குறித்த உண்மை நிலவரம் தெரிய வந்துள்ளது. அதாவது அந்த வீடியோவில் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும், சிம்பு நடிக்கும் புதிய விளம்பரம் ஒன்றில் இடம்பெற்றது. மற்றபடி அவரது 48வது படத்தில் அக்காட்சிகள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதையறிந்த சிம்பு ரசிகர்கள் நொந்து போய்விட்டனர். ஏப்ரல் 1ம் தேதிக்கு சிம்பு இப்பவே முன்னோட்டம் பார்த்துட்டாரே என, பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்