- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக தலைவர் விஜய்க்கு எதிராக காமெடி நடிகர்களை களம் இறக்கும் ஆளுங்கட்சி - அவங்க போடற...

தவெக தலைவர் விஜய்க்கு எதிராக காமெடி நடிகர்களை களம் இறக்கும் ஆளுங்கட்சி – அவங்க போடற கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா?

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் நடிகர் அவர்தான். ரஜினிகாந்த் கமல்ஹாசன் கூட இன்னும் ரூ. 150 கோடியை தாண்டவில்லை. அதே நேரத்தில் பிளாப் படம் தந்தாலும் விஜய் படம் என்றால் ரூ. 200 கோடி லாபத்தை அள்ளித் தந்து விடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது நடித்து வரும் ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என்று ஏற்கனவே விஜய் அறிவித்துவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி துவக்கிய அவர், அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்தி முடித்தார்.

என்னுடைய அரசியல் எதிரி திமுக, என்னுடைய கொள்கை எதிரி பாஜக என்று கூறிவரும் நடிகர் விஜய், மத்திய அரசை பாசிசம் என்றும் மாநில அரசை பாயாசம் என்றும் கிண்டலாக கூறி வருகிறார். சமீபத்தில் தவெக கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய நடிகர் விஜய், மும்மொழி கொள்கை விவகாரத்தில் எல்கேஜி யுகேஜி பசங்க மாதிரி அடிச்சிக்கறாங்க என்றும் கலாய்த்தார்.

இந்நிலையில் நடிகர் வடிவேலு திமுகவின் ஆதரவாளராக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். கடந்த 2011ம் ஆண்டில் திமுக தேர்தல் பிரசார மேடைகளில் ஏறிய நடிகர் வடிவேலு, தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் குறித்து தாறுமாறாக விமர்சித்தார். ஆனால் அந்த தேர்தல் விஜயகாந்த் அதிக ஓட்டுகளில் அதிக தொகுதிகளில் வென்று அதிமுக சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார். திமுக 3ம் இடத்துக்கு போனது.

இப்போது விஜய் அரசியல் தலைவராக 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி உள்ள நிலையில், திமுக மேடைகளில் ஏறத் துவங்கியுள்ள வடிவேலு, சமீபத்தில் மும்மொழி கொள்கை குறித்து பேசுகையில் கிளியை காக்கா மாதிரி கத்தச் சொல்வது நியாயமா என கேட்டிருந்தார். மேலும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என்றும் பேசியிருக்கிறார்.

நேற்று நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காமெடி நடிகர் கருணாஸ், பாசிசம் பாயாசம் குறித்து ஒரு பாதரசம் பேசியிருக்கிறது. இது நஞ்சை கக்கும். எதனுடன் ஒட்டாதது பாதரசம் என்று நடிகர் விஜயை தாக்கி பேசியிருக்கிறார். ஆக, நடிகர் விஜய்க்கு எதிராக தேர்தல் பிரசார களத்தில் சினிமா நடிகர்களை இறக்கும் திட்டத்தில் திமுக உறுதியாக இருக்கிறது. ஆனால் இது எந்தளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் எனத் தெரியவில்லை.

சற்று முன்