- Advertisement -
Homeபொழுதுபோக்குபடப்பிடிப்பில் இருந்து சமந்தாவை பாதியிலேயே வெளியேற்றிய மணிரத்னம், அதுவும் இப்படி ஒரு காரணத்துக்காகவா? அடப்பாவமே

படப்பிடிப்பில் இருந்து சமந்தாவை பாதியிலேயே வெளியேற்றிய மணிரத்னம், அதுவும் இப்படி ஒரு காரணத்துக்காகவா? அடப்பாவமே

- Advertisement -

சமந்தா தற்போது தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த “குஷி” திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கும் சமந்தாவுக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்க்கவுட் ஆகியிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சமந்தா “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியிருந்தாலும் அவர் நடித்த முதல் திரைப்படம் “மாஸ்கோவின் காவிரி”.

- Advertisement -

இத்திரைப்படத்தை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த சமந்தா தெலுங்கு சினிமாவிலும் ஒரு ரவுண்டு வந்தார். அதன் பின் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா, கடந்த 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.

சமந்தா ஒரு முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த சமயத்தில் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார். அவரை வைத்து சில காட்சிகளும் படமாக்கப்பட்டது. ஆனால் அவருக்கு இருந்த தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாக அத்திரைப்படத்தில் இருந்து விலகினார்.

- Advertisement -

ஆனால் சமந்தா அதற்கு முன்பே ஒரு மணிரத்னம் திரைப்படத்தில் ஒப்பந்தமானாராம். அதாவது சமந்தாவின் முதல் திரைப்படமே ஒரு மணிரத்னம் திரைப்படம் என்று கூறப்படுகிறது.

அதாவது ஒரு மணிரத்னம் திரைப்படத்திற்கான ஆடிஷனில் கலந்துகொண்டாராம் சமந்தா. அப்போது அவர் அத்திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அதன் பின் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அவரை வைத்து படமாக்கினார்களாம்.

அவரும் தனது தோழிகளிடம் தான் மணிரத்னம் படத்தில் நடித்துக்கொண்டிருப்பதாக பெருமையுடன் கூறியிருக்கிறார். ஆனால் சமந்தாவின் தோல் அமைப்பு அந்த படத்திற்கு எடுப்பாக இல்லை என்று கூறி சமந்தாவை அந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டாராம் மணிரத்னம். இவ்வாறு இரண்டு முறை மணிரத்னம் படத்தில் இருந்து சமந்தா நீக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

 

- Advertisement -

சற்று முன்