- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த விஷயத்தில் விஜய் இடத்துக்கு வந்து விட்டாரா நடிகர் சிவகார்த்திகேயன், அட அதை நிரூபிக்கிற மாதிரி...

இந்த விஷயத்தில் விஜய் இடத்துக்கு வந்து விட்டாரா நடிகர் சிவகார்த்திகேயன், அட அதை நிரூபிக்கிற மாதிரி அப்படி ஒரு தரமான சம்பவம் நடக்கப் போகுதா, போடு வெடிய…

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கியுள்ள நடிகர் விஜய், வருகிற 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு தமிழகத்தின் முதல்வராகும் லட்சியத்தில் செயல்பட்டு வருகிறார். அதற்காக சினிமாவுக்கு குட்பை சொல்லவும் அவர் தயாராகி விட்டார்.

நடிகர் விஜயை பொருத்த வரை, சினிமா களத்தில் அவருக்கு போட்டியாக கருதப்படுபவர் அஜீத்குமார்தான். இனி விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டால் அஜீத்குமாருக்கு யாரும் போட்டியில்லை என்றுதான் கூறப்பட்டது. ஆனால் சினிமாவில் விஜய் விட்டுச் செல்லும் இடத்தை பிடித்த ஐந்து நடிகர்களுக்குள் கடும் போட்டி நடப்பதாக கூறப்படுகிறது.

நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, சிலம்பரசன், சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ஆகிய ஐந்து பேரில் ஒருவர்தான் விஜய் இடத்தை பிடிக்க போகின்றனர் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் சிவகார்த்திகேயன், தனுஷ் இருவர் மட்டுமே அடுத்தடுத்த வெற்றிப் படங்களை தந்து முன்னணியில் இருந்து வருகின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

அதனால் இந்த ஐந்து பேர் கொண்ட போட்டியில் விஜய் சேதுபதி, சூர்யா, சிலம்பரசன் ஆகியோர் தானாகவே ஒதுங்கிக்கொள்ளும் பட்சத்தில், தனுஷ் நடிப்பது வேறு பாணி என்பதால் சிவகார்த்திகேயன்தான் விஜய் இடத்துக்கு சரியான நடிகராக இருப்பார் என்றும் பேசப்பட்டு வருகிறது.

ஏனெனில் ரஜினி ஸ்டடைலில் ஆக்ரோஷமான, ஸ்டைலான நடிப்பை வெளிப்படுத்தி தான் விஜய், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதே பாணியில் ரஜினி ஸ்டைலில் நடிப்பதுதான் சிவகார்த்திகேயனின் பாணியாக உள்ளது. அதுமட்டுமின்றி இளமைக்கால ரஜினியை போலவே, சிவகார்த்திகேயனின் தோற்றமும் இருப்பதால் விஜய் இடத்துக்கு சிவகார்த்திகேயன்தான் பொருத்தமாகவும் இருப்பார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது..

இந்நிலையில் வருகிற தீபாவளியன்று அக்டோபர் 31ம் தேதி, விடாமுயற்சி படம் ரிலீஸாகிறது. அதே நாளில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படமும் ரிலீஸாகிறது. விஜய் படம், அஜீத் படத்துடன் மோதுவது போல, விஜய் இடத்துக்கு வரப் போவதாக கூறப்படும் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம், அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படத்துடன் மோதுவதால், இதுதான் சரியான சம்பவம், விஜய் இடத்தில் இருந்து அஜீத்குமாருடன் மோதுகிறார் சிவகார்த்திகேயன் என்று அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சற்று முன்