- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியில் கொண்டாட்டம், தமிழில் திண்டாட்டம்; நடிகர் விஜய் படத்துக்கு இப்படி ஒரு நிலமையா? - அப்போ...

இந்தியில் கொண்டாட்டம், தமிழில் திண்டாட்டம்; நடிகர் விஜய் படத்துக்கு இப்படி ஒரு நிலமையா? – அப்போ நார்த் இண்டியன்ஸ் ஓட்டுகள் தளபதிக்குதானா?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இம்மாதம் 5ம் தேதி தி கோட் படம் ரிலீசானது. இதுவரை 400 கோடி ரூபாய் வரை வசூலை கடந்துள்ள தி கோட் படம் தொடர்ந்து தமிழ்நாட்டில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் விஜயை பொறுத்தவரை இந்த படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாக இரண்டிலுமே வெற்றி பெற்ற படமாக தான் பார்க்கப்படுகிறது.

ஏனெனில் தி கோட் படத்தில் விஜய் நடிப்பு குறிப்பாக மகன் கேரக்டரில் நடித்த விஜயின் வில்லன் நடிப்பு பெரியளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதேபோல் படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர், நடிகைகளின் நடிப்பும் படத்துக்கு வலு சேர்த்துள்ளது. 386 கோடி ரூபாய் எடுக்கப்பட்ட படம், கணிசமான லாபத்தை படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு தந்துள்ளது.

- Advertisement -

கடந்தாண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தின் வசூலுடன் ஒப்பிடும்போது தி கோட் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கூறப்படுகிறது. தி கோட் படம் 1000 கோடி ரூபாய் வசூல் இலக்கு என்று கூறப்பட்ட நிலையில், இன்னும் ரூ. 500 கோடியை கூட இந்த படம் நெருங்கவில்லை என்பதும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

தி கோட் படம் ரிலீஸ் ஆகி 16 நாட்கள் கடந்த நிலையில் தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் இல்லை. ரசிகர்கள் வருகை மிகவும் சொற்பமாக உள்ள பல தியேட்டர்களில் காட்சி ரத்து செய்யப்படுவது சில தினங்களாக நடக்கிறது. விஜய் படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா என்று வருந்தும் அளவுக்கு ரசிகர்கள் வருகை இல்லாதது ஏமாற்றம் தருகிறது.

- Advertisement -

வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி தர முடியாது.அந்த தொகை கழியும் வரை படத்தை ஓட்டுமாறு தியேட்டர்கள் நிர்வாகங்களுக்கு வினியோகஸ்தர்கள் தரப்பில் அழுத்தம் தரப்படுகிறது. அதனால் வேறு வழியின்றி தியேட்டர் நிர்வாகங்கள் தி கோட் படத்தை ஓட்டி வருகின்றன. ஆனால் இந்தி வெர்ஷனில் வெளியாகியுள்ள விஜய் நடித்த தி கோட் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பும், ஆதரவும் இன்று வரை தொடர்கிறது.

இந்தியில் நடிகர் விஜயை நார்த் இந்தியன் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். திரையில் விஜய் வரும் காட்சிகளை ஆரவாரமாக வரவேற்கின்றனர். தமிழ் நாட்டில் ரசிகர்கள் வருகை இன்றி தி கோட் படம் தியேட்டர்களில் காட்சி ரத்து செய்யப்படும் நிலையில், வடமாநிலங்களில் தி கோட் படம் பெரிய வரவேற்புடன் ஆரவாரமாக ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுவது ஆச்சரியமளிக்கிறது.

- Advertisement -

சற்று முன்