- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரங்கம் எல்லாம் இனி அதிராது… இதெல்லாம் ஒரு கதையா? லோகிண்ணா என்னண்ணா இது….? சூப்பர்...

அரங்கம் எல்லாம் இனி அதிராது… இதெல்லாம் ஒரு கதையா? லோகிண்ணா என்னண்ணா இது….? சூப்பர் ஸ்டாரை இப்படி காட்டலாமா? – அப்செட் ஆன ரஜினி ரசிகர்கள்!

- Advertisement -

தியேட்டரில் படம் துவங்கும் போது, மது அருந்துவது உடல்நலத்தை பாதிக்கும். புகை பிடிக்காதீர் புகை பிடிக்கவும் அனுமதிக்காதீர், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்று திரையில் வாசகங்கள் மூலம் அறிவுறுத்துவது போல, இனி நல்ல மன ஆரோக்கியம் வேண்டும் என்றால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் படங்களை பார்க்காதீர்கள் என்று தாராளமாக சொல்ல வேண்டும் என்றுதான் கூலி படம் பார்த்த ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

இதெல்லாம் ஒரு படமா என்றுதான் முதலில் கேள்வி எழுகிறது. ரஜினியின் நண்பர் சத்யராஜ் ஒரு மின்சார நாற்காலி கண்டுபிடிக்கிறார். அதில் உட்காரும் மனிதர் சில விநாடிகளில் சாம்பலாகி விடுகிறார். அதை தெரிந்து கொள்ளும் வில்லன் குரூப், அவர்கள் கொல்லும் ஆட்களை சத்யராஜை வைத்து எரித்து சாம்பலாக்குகிறது. அதற்கு பணமும் தருகிறது.

- Advertisement -

ஒரு கட்டத்தில் அந்த வில்லன் குரூப் சத்யராஜை கொன்று விடுகிறது. பிறகு தனது நண்பர் சத்யராஜின் மகளுக்காக, நடிகர் ரஜினிகாந்த் அதே பணியை செய்கிறார். வில்லன் நாகர்ஜூனா கொன்று குவிக்கும் சடலங்களை எடுத்து வந்து, ஸ்ருதிஹாசனுடன் சேர்ந்துக்கொண்டு எரித்து சாம்பலாக்குகிறார்.

இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல படங்களில் போலீஸ் அதிகாரியாக இராணுவ வீரராக தாதாவாக டாக்டராக விஞ்ஞானியாக ஆட்டோ டிரைவராக கூட நடித்திருக்கிறார். எந்த கேரக்டர் என்றாலும் அது ரஜினி நடித்த பிறகு அந்த தொழிலுக்கே ஒரு மரியாதை கௌரவம் ஏற்பட்டு விடும். ஆனால் இந்த படத்தில் ரஜினி சடலங்களை எரிக்கும் காட்சியில் வெட்டியானாக நடித்தது பார்த்து ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

- Advertisement -

லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பதால் ரஜினியை வெச்சு செஞ்சுவிட்டார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. அதுதவிர படம் முழுக்க ஒரே ரத்தம் வெட்டு குத்து துப்பாக்கி சத்தம் என படம் முழுக்க திரையில் ரத்தமே தெறிக்கிறது. ஏதோ 2 கேங்ஸ்டர்களுக்கும் சண்டை நடக்கும் போது நடுவில் புகுந்து வெளியேறிய அனுபவம்தான் படம் பார்த்த ரசிகர்களுக்கு இருக்கிறது.

இந்த படத்தை பொருத்த வரை சௌபிர் சாஹிர், அவரது மனைவியாக நடித்த ரக்சிதா ராம் இருவரை தவிர யாருக்கும் நடிப்பும் இல்லை. கொஞ்சம் பாராட்டை பெறும் நடிப்பை அவர்கள் தந்திருக்கின்றனர். மற்றபடி படத்தில் எந்த கேரக்டரும் மனதில் நிற்கவில்லை. மோனிகா பாடலும், ரஜினியின் அறிமுக பாடலும் கொஞ்சம் மனதை உற்சாகப்படுத்துகிறது. மற்றபடி கூலி படம் பார்க்க செல்லாமல் தவிர்ப்பது ரசிகர்களின் மனநலனுக்கு மிகவும் நல்லது, உங்கள் மணி பர்ஸ்க்கும் பாதுகாப்பானது.

- Advertisement -

சற்று முன்