- Advertisement -
Homeபொழுதுபோக்குடைரக்டர் கொடுத்த உத்தரவாதத்தை நம்பி ரூ. 50 கோடி பட்ஜெட்டில் படம் தயாரித்த தயாரிப்பாளர் -...

டைரக்டர் கொடுத்த உத்தரவாதத்தை நம்பி ரூ. 50 கோடி பட்ஜெட்டில் படம் தயாரித்த தயாரிப்பாளர் – போட்ட காசை மருமகன் ஆகாஷ் திருப்பி எடுப்பாரா?

- Advertisement -

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நேசிப்பாயா என்ற படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்த படத்தில் நாயகனாக ஆகாஷ் முரளி அறிமுகமாகிறார். இவர் நடிகர் முரளியின் இளைய மகன், நடிகர் அதர்வாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. முதன் முறையாக நேசிப்பாயா படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.

அறிந்தும் அறியாமலும் பட்டியல் பில்லா சர்வம் ஆரம்பம் குறும்பு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இவர் ஆகாஷ் முரளியின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டோ மகளை தான் ஆகாஷ் திருமணம் செய்திருக்கிறார்.

- Advertisement -

நடிகர் முரளி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தில் சிறந்த நடிகராக இருந்தவர். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். அதே போல் பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமான நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வாவும் பல வெற்றிப் படங்களில் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார்.

குறிப்பாக இயக்குனர் பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் அதர்வா நடிப்பு வேற லெவலில் இருந்தது. அதே போல் ஈட்டி சண்டி வீரன் 100 கணிதன் இமைக்கா நொடிகள் போன்ற பல படங்களில் அதர்வா சிறந்த நடிப்பை தந்திருந்தார். இப்போது சுதா கொங்கரா இயக்கும் 1965 படத்தில், சிவகார்த்திகேயனுடன் முக்கிய கேரக்டரில் அதர்வா நடித்து வருகிறார்.

- Advertisement -

ஆகாஷ் முரளி நடித்துள்ள நேசிப்பாயா படம் ரூ. 50 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் முதல் படம், நாயகனாக ஆகாஷ் அறிமுகம் ஆகும் முதல் படமே இப்படி தயாரிக்கப்பட வேண்டுமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் இந்த படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் என்ற பெயரை பார்த்தாலே, ஓடிடி உரிமம், டிஜிட்டல் விற்பனை உடனே நடந்துவிடும் என இயக்குனர், தயாரிப்பாளர் பிரிட்டோவிடம் கூறியிருக்கிறார்.

அவர் கொடுத்த உத்தரவாதத்தை நம்பியும், தனது மருமகன் நடிக்கும் முதல் படம் என்பதாலும் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ரூ. 50 கோடி வரை தாராளமாக செலவு செய்து நேசிப்பாயா படத்தை தயாரித்திருக்கிறார். ஆனால் வரும் 14ம் தேதி நேசிப்பாயா படம் ரிலீஸாக உள்ள நிலையில் இதுவரை இந்த படத்தை ஓடிடி நிறுவனங்கள், டிஜிட்டல் உரிமம் கேட்டு யாருமே அணுகவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

- Advertisement -

சற்று முன்