- Advertisement -
Homeபொழுதுபோக்குபோதைப் பொருளை மையப்படுத்திய படங்களை நான் எடுக்க இதுதான் காரணம் - ஓபன் ஸ்டேட்மென்ட்...

போதைப் பொருளை மையப்படுத்திய படங்களை நான் எடுக்க இதுதான் காரணம் – ஓபன் ஸ்டேட்மென்ட் விட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

- Advertisement -

தமிழ் சினிமாவில், இன்று பரபரப்பாக பேசப்படும் ஒரு இளம் இயக்குராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு படங்களை இயக்கிய நிலையில், 5வது படமாக வரும் 19ம் தேதி விஜய் நடித்த லியோ படம் திரைக்கு வருகிறது. ஹீரோவாக விஜயை வைத்து 2 படங்களும், கமல், கார்த்தி, ஸ்ரீ ஆகியோர் ஹீரோக்களாக வைத்து,மூன்று படங்களும் இதுவரை இயக்கி இருக்கிறார்.

இதுதவிர, ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினி 171 படத்தை இயக்க இருப்பதும் லோகேஷ் கனகராஜ்தான். மேலும் விக்ரம் 2, கைதி 2 படங்கள் மட்டுமின்றி, லியோ படமும் பாகம்2 ஆக வரவும் வாய்ப்புள்ளது. இதுதவிர ரோலக்ஸ் கேரக்டரை மையப்படுத்திய படத்தையும் லோகேஷ் திட்டமிட்டு இருக்கிறார்.
இரும்புக்கை மாயாவி என்ற கதை இதைபற்றியதாக இருக்க வாய்ப்புள்ளது.

இதுவரை லோகேஷ் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய 3 படங்களிலுமே போதைப் பொருள் சார்ந்த விஷயங்களை மையப்படுத்தியதாக இருக்கிறது. கைதி படத்தில், போலீசாரிடம் பிடிப்பட்ட போதை பொருட்களை மீட்க கடத்தல் கும்பல் போராடும். விக்ரம் படத்திலும், சந்தானமாக நடித்த விஜய் சேதுபதி கேரக்டரும் அந்த போதைப்பொருட்களை மீட்கவே போராடுவதாக இருக்கும். மாஸ்டர் படத்திலும், விஜய் படத்தின் பாதி வரை எந்நேரமும் போதையில் இருப்பார்.

இப்படி உங்களது படங்களில் போதை பொருட்களை மையப்படுத்தியே கதை இருப்பது ஏன் என்ற கேள்விக்கு, நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, நான் போதையை ஆதரிப்பவன் அல்ல என்பதை தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். நான் போதைப் பொருட்களை மையப்படுத்தி எடுக்க காரணம், போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதை இல்லாத ஒரு சமூகம் உருவாக வேண்டும் என்பதே என் திட்டம்.

கைதி படத்தில், இந்த போதை பொருட்களுக்காக தான் இவர்கள் இத்தனை பிரச்னை செய்கின்றனர். அதனால், மொத்தத்தையும் கொளுத்தி விடுவோம் என, ஒரு வசனம் வரும். அதே போல் விக்ரம் படத்திலும் ஒரு காட்சியில் கமல், குரங்காக இருந்த மனுஷன், இப்பதான் மனுஷனாக மாறி இருக்கான். இந்த போதை பொருட்களால், மறுபடியும், மனுஷன் குரங்கா மாறிடுவான், என்று பேசுவார். மாஸ்டர் படத்தில், பாதி வரை மதுவுக்கு அடிமையாக இருக்கும் விஜய், ஒரு கட்டத்தில் திருந்தி, போதைக்கு எதிராக போராடுவார்.

என் படத்தில் நடிக்கும் கமல், விஜய் போன்ற பெரிய ஹீரோக்கள், இப்படி போதை பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுவது, இன்னும் நல்ல விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும். போதை இல்லாத ஒரு சமுதாயம் உருவாக அது அதிக வாய்ப்பளிக்கும் என்பதால்தான், என் படங்களில் நடிக்கும் பெரிய ஹீரோக்களை, போதையை எதிர்க்கும் விஷயங்களை பேச வைக்கிறேன், என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்

சற்று முன்