- Advertisement -
Homeபொழுதுபோக்குசம்பள பிரச்னைக்கு இதுதான் தீர்வு, இப்படி செய்தால் நடிகர் அஜீத்குமார் பல படங்களில் நடிக்கலாம் -...

சம்பள பிரச்னைக்கு இதுதான் தீர்வு, இப்படி செய்தால் நடிகர் அஜீத்குமார் பல படங்களில் நடிக்கலாம் – சூப்பர் ஐடியா கொடுத்த பிரபலம், ஏகே யோசிப்பாரா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடித்த குட்பேட் அக்லி படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டது. இன்னும் தனது அடுத்த படத்தில் நடிக்காமல் அஜீத்குமார் கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தரப்பிலும் பெரிய ஆர்வமோ அக்கறையோ இல்லை.

அதற்கு முக்கிய காரணம் அஜீத்குமார் ஒரு படத்தில் நடிக்க ரூ. 185 கோடி வரை சம்பளம் கேட்கிறார். அவரது வியாபாரமே ரூ. 225 கோடி என்ற நிலையில் ரூ. 110 கோடி வரை சம்பளம் தர தயாரிப்பாளர்கள் முன்வருகின்றனர். ஆனால் குறைந்த பட்சம் ரூ. 150 கோடி சம்பளம் என்றால் தான் அஜீத்குமார் ஓகே சொல்வார் என்றும் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது, நடிகர் அஜீத்குமார் கேட்கும் சம்பளத்தை கொடுக்கும் தயாரிப்பாளர்கள் கோலிவுட்டில் இப்போது குறைவுதான். உண்மையில் அவருக்கு அந்த அளவில் சம்பளம் கொடுக்க யாரும் இல்லை என்றுகூட சொல்லலாம்.

பெரிய முதலீடுகளுடன் செயல்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் தங்களது முதலீட்டினை இங்கே வெகுவாக குறைத்துவிட்டன என்பதுதான் உண்மை. இப்போது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் சன்பிக்சர்ஸ் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஆகிய சில நிறுவனங்கள்தான் சினிமா மீது ஆர்வத்தோடு படம் தயாரிக்க இருக்கின்றன. ஆனால் அந்த நிறுவனங்களும் பெரிய அளவில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

- Advertisement -

ஹீரோக்களுக்கு சம்பளத்துக்கு பதிலாக லாபப் பகிர்வு அதாவது பிராப்பிட் ஃஷேர் முறையில் தான் படங்களை தயாரிக்க விரும்புகின்றன. ஆனால் அஜீத்குமார் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை தான் எதிர்பார்க்கிறார். அவர் ஏற்கனவே பொருளாதார நிலையில் நன்றாக தான் இருக்கிறார். கார் ரேஸில் அதிக ஆர்வம் இருக்கிறது. விளம்பரங்கள் மூலமாகவும் தனியாக பெரிய அளவில் வருமானத்தை ஈட்டி வருகிறார்.

எனவே சினிமாவுக்காகவும் ரசிகர்களுக்காகவும் அஜீத் ஒரு சேவையாக நினைத்து தனக்கு பிடித்த தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து லாப பகிர்வு அதாவது பிராப்பிட் ஃஷேர் முறையில் படங்களை செய்ய முன்வர வேண்டும். அப்படி செய்தால் ரசிகர்களுக்கு அவரிடம் இருந்து குறைந்தபட்சம் 2 அல்லது 3 பெரிய படங்களாவது தொடர்ந்து கிடைக்கும் என்று திருப்பூர் சுப்பிரமணியம் ஐடியா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்