- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் தமிழகத்திலிருந்து 2 சூப்பர் ஸ்டார்கள் இணைகிறார்களா... ஏங்க இதெல்லாம்...

அட்லி – அல்லு அர்ஜுன் படத்தில் தமிழகத்திலிருந்து 2 சூப்பர் ஸ்டார்கள் இணைகிறார்களா… ஏங்க இதெல்லாம் நடந்தால் திரையரங்குகள் என்ன கதிக்கு ஆகுமோ தெரியலையே…

- Advertisement -

அட்லியின் கடைசி திரைப்படமாக ஜவான் படம் வெளிவந்தது. தமிழில் நான்கு திரைப்படங்களை இயக்கிய அவர், தனது ஐந்தாவது திரைப்படத்திற்காக இந்தி திரை உலகிற்கு சென்றார். அங்கு ஷாருக்கானுடன் கைகோர்த்து அவர் மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்தார். கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் செய்தது.

இந்த திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க மும்பையிலேயே தங்கி விட்டார் அட்லி. இதற்காக அங்கு ஒரு பங்களாவையும் அவர் வாங்கி விட்டார். தொடர்ந்து தனது தெறி திரைப்படத்தை ரீமேக் செய்து தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். வருண் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த திரைப்படம் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இப்படியான சூழலில் அட்லியின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் மட்டுமே வெளியாகி கொண்டு இருக்கிறதே தவிர அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. அவர் முதலில் சல்மான் கான் உடன் தான் இணைவதாக இருந்தது. படத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்கவும் அவர் திட்டமிட்டார்.

இதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் எட்டிய சூழலில் அது திடீரென நின்றுவிட்டது. சல்மான் கானும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க சென்று விட்டார். இவர்கள் கூட்டணியில் தற்போது, சிக்கந்தர் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இது வரும் ரம்ஜானுக்கு வெளியாவதாக கூறுகிறார்கள். இதனிடையே அட்லியின் அடுத்த திரைப்படம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

- Advertisement -

இந்த முறை அவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுடன் கை கோர்த்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறதாம். இதற்காக பிரம்மாண்ட செட் போட்டு எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் அட்லி. அதுமட்டுமல்ல முன்னணி நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் இணைய போவதாக அவ்வபோது தகவல் வெளியாகி வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சிவகார்த்திகேயனும் இந்த திரைப்படத்தில் நடிக்கப் போவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இருவரும் கேமியோ ரோலில் வருவதாக கூறுகிறார்கள். அந்த அளவுக்கு அட்லி கச்சிதமாக கதை எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்