ரேடியோ ஜாக்கியாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ஆர்ஜே பாலாஜி. பிறகு நானும் ரவுடிதான் கவலை வேண்டாம் மூக்குத்தி அம்மன் ரன் பேபி ரன் எல்கேஜி சிங்கப்பூர் சலூன் சொர்க்கம் வீட்ல விசேஷம் தேவி தேவி 2 வடகறி இவன் தந்திரன் தானா சேர்ந்த கூட்டம் எதிர்நீச்சல் என பல படங்களில் நடித்திருக்கிறார்.
இதில் எல்கேஜி வீட்ல விசேஷம் மூக்குத்தி அம்மன் சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் படத்தின் நாயகன் ஆர்ஜே பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது. மூக்குத்தி அம்மன் வீட்ல விசேஷம் போன்ற படங்களின் இயக்குனரும் அவர்தான். இந்நிலையில் இப்போது சூர்யா நடித்த கருப்பு என்ற படத்தை ஆர்ஜே பாலாஜி டைரக்ட் செய்திருக்கிறார். அந்த படம் அடுத்த ஆண்டில் வெளியாக உள்ளது.
கருப்பு படத்தில் சூர்யா அய்யனார் சாமியாகவும் அதே நேரத்தில் வக்கீல் கேரக்டரிலும் நடித்திருக்கிறார். திரிஷா ஷிவதா சுவாசிகா நட்டி நடராஜ் யோகிபாபு மன்சூர் அலிகான் ஆகியோருடன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் ஆர்ஜே பாலாஜியும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்ப இன்னும் 10 நாட்கள் பாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் ஆர்ஜே பாலாஜிக்கும் திரிஷாவுக்கும் இடையே லடாய் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.
அதுமட்டுமின்றி இந்த படத்தில் நாயகன் சூர்யாவுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் வில்லன் கேரக்டரில் வரும் தனக்கு அதிக முக்கியத்துவம் உள்ள வகையில் ஆர்ஜே பாலாஜி திரைக்கதையை உருவாக்கி இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மை எனும் பட்சத்தில் படத்தின் ப்ரிவியூ ஷோவை நாயகன் சூர்யா பார்க்கும் போது பிரச்னை வெடிக்க அதிக வாய்ப்புள்ளது.
கருப்பு படம் இன்னும் டிஜிட்டல் வியாபாரம் நடக்கவில்லை. அதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே உள்ளது. வரும் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் என படக்குழு திட்டமிட்டு இருந்தாலும் இன்னும் அதை உறுதி செய்யவில்லை. அதற்குள் அதே நாளில் வேறு படங்கள் போட்டிக்கு வந்தாலும் கருப்பு படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் பெரிய படங்கள் வரும்போது போட்டிக்கு மற்ற படங்கள் வராமல் இருப்பதே முக்கியம்.
இதற்கிடையே கருப்பு படத்தின் ரிலீஸ், 10 நாட்கள் பாக்கி படப்பிடிப்பு ஆகிய பணிகளை எல்லாம் சற்று தள்ளி வைத்த படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, இப்போது குட்நைட் குடும்பஸ்தன் படங்களின் நாயகன் நடிகர் மணிகண்டனை சமீபத்தில் சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார். அவருக்கும் கதை பிடித்துப் போய் உடனே ஓகே சொல்லி விட்டார். விரைவில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





