- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் 28ம் தேதி கண்டிப்பாக இதை செய்யணும், நடிகர் விஜய் தனது கட்சியினருக்கு போட்ட அதிரடி...

வரும் 28ம் தேதி கண்டிப்பாக இதை செய்யணும், நடிகர் விஜய் தனது கட்சியினருக்கு போட்ட அதிரடி உத்தரவு – அடடா… தளபதி வேற லெவல்ல சம்பவம் பண்றாரே?

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கியுள்ள நடிகர் விஜய், மற்ற அரசியல்வாதிகளை போல் இல்லாமல் வேறு கோணத்தில் சிந்திக்கிறார் என்பது ஆரம்பத்தில் இருந்தே அவரது நடவடிக்கைகளில் தெரிய வருகிறது. ஏனெனில், எந்த அரசியல் தலைவருமே செய்யாத வகையில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு ரொக்க பரிசு வழங்கினார்.

ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க 200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் அளவுக்கு பெரிய நடிகராக, முன்னணியில் இருந்தும் சினிமா வேண்டாம், அரசியலுக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அவரது நோக்கமே, மக்களின் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய அபிமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விஜயகாந்தை போலவே, விஜய்க்கும் தமிழக மக்கள் அபரிமிதமான வரவேற்பை தருவார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஆனால் ஒரு தரப்பினர், விஜய்க்கு என்ன தெரியும், அவர் மக்களை சந்தோஷப்படுத்துகிற ஒரு கலைஞர். அவருக்கு அரசியலில் என்ன அனுபவம் இருக்கிறது என்றும் கேள்வி கேட்கின்றனர். திமுக தலைவர் மகன் ஸ்டாலின் முதல்வராகிறார். ஸ்டாலின் மகன் உதயநிதி அடுத்த முதல்வராக வரும்போது, உதயநிதிக்கு இருக்கிற தகுதி, விஜய்க்கு இல்லையா என்று பதிலடி தந்து வருகின்றனர். ஏனெனில் உதயநிதி ஸ்டாலினும் ஒரு திரைப்பட நடிகர் என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், வருகிற மே 28ம் தேதி, உணவு பாதுகாப்பை வலியுறுத்தியும், ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய வலியுறுத்தியும் உலக நாடுகளில் உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் தனது கட்சியினருக்கு முக்கிய அறிவிப்பை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் உத்தரவுபடி, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

பட்டினி இல்லாத உலகத்தை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தவெக தலைவர் விஜய் உத்தரவுபடி, உலக பட்டினி தினமான வரும் 28ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

மாவட்டம், அணிகள், நகரம், ஒன்றியம், கிளைகள் என சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து உரிய தேர்தல் வழிமுறைகளை பின்பற்றி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபட வேண்டும் என்று, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சற்று முன்