- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த பொண்ணு அவங்க அம்மா மாதிரி தானே சமைக்கும்? - நடிகை ஸ்ருதிஹாசனுக்கு வந்த திடீர்...

அந்த பொண்ணு அவங்க அம்மா மாதிரி தானே சமைக்கும்? – நடிகை ஸ்ருதிஹாசனுக்கு வந்த திடீர் கோபம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்த்திரமாக உள்ள நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். திரைப்பட நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் இருந்து வருகிறார். தமிழில் 7ம் அறிவு புலி வேதாளம் கூலி உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஸ்ருதிஹாசன் தெலுங்கில் நிறைய படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

திருமண வயது கடந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் ஸ்ருதிஹாசன் திருமணம் செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். லிவிங் டூ ரிலேசன் முறையில் சில ஆண் நண்பர்களுடன் அவர் இருந்த நிலையில் இப்போது யாருடைய நட்பும் இல்லாமல் மும்பையில் தனியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் இளைய மகள் அக்சராஹாசன் இருவருமே இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாத நிலையில் கமலுக்கு இது பலத்த ஏமாற்றமாகவே இருந்து வருகிறது. ஆனால் இருவருமே திருமண வாழ்க்கை வேண்டாம் என்கிற முடிவில்தான் இருந்து வருகின்றனர்.

அதே நேரத்தில் பெண்களுக்கான சமூக கட்டுப்பாடுகள் குறித்தும் ஸ்ருதிஹாசன் சில இடங்களில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார். தனது விருப்பபடி உடையணிதல் திருமணம் செய்யாமல் தனித்து வாழ்தல் தனது வாழ்க்கை முடிவுகளை தானே எடுத்தல் போன்ற பல விஷயங்கள் குறித்து அவர் வெளிப்படையாக பேசி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன் கூறியதாவது, நான் சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பார்த்தேன். ஒரு புருஷன் தன்னுடைய மனைவி அவங்க அம்மா மாதிரி சமைக்கலேன்னு ரொம்பவும் அப்செட் ஆகிட்டான். அதை பார்த்ததும் எனக்கு டென்சன் ஆகி விட்டது.

உன் பொண்டாட்டி ஏன் உங்கம்மா மாதிரி சமைக்கணும்? நீ தான் உங்க அம்மா சமையலை 30 வருஷமா சாப்பிட்டு இருக்கே? அப்ப நீதானே உங்க அம்மா மாதிரி சமைக்கணும். அந்த பொண்ணு அவங்க அம்மா மாதிரி தானே சமைக்கும்? உங்க அம்மா மாதிரி அந்த பொண்ணு எப்படி சமைக்கும் என்று அந்த நேர்காணலில் ஆவேசமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்