- Advertisement -
தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் படங்கள் குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது. அதில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான பார்ட்டி படம் நடிகர் சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் நடித்த இடம் பொருள் ஏவல் அரவிந்தசாமி திரிஷா நடித்த சதுரங்க வேட்டை 2 அரவிந்தசாமி சந்தீப் கிஷன் ஸ்ரேயா சரண் நடித்த நரகாசுரன் நடிகை ஆண்ட்ரியா நடித்த மனுஷி வைபவ் பார்வதி நாயர் நடித்த ஆலம்பனா ஆகிய 8 படங்கள் இன்னும் திரைக்கு வராமல் பல சிக்கல்களால் முடங்கி கிடக்கின்றன.





