- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ரி ரிலீஸ் ஆகும் படங்கள் - இதென்ன… புது படங்கள் ரிலீஸை...

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ரி ரிலீஸ் ஆகும் படங்கள் – இதென்ன… புது படங்கள் ரிலீஸை விட பழைய படங்கள் ரி ரிலீஸ் அதிகரிக்குதே…?

- Advertisement -

சினிமா தியேட்டர்களை ஏ சென்டர் பி சென்டர் சி சென்டர் என்று சினிமா துறையில் 3 வகைகளாக குறிப்பிட்டு சொல்வது வழக்கம். பெரிய நகரம் என்றால் ஏ சென்டர் தியேட்டர் எனவும் சிறிய நகரம் என்றால் பி சென்டர் தியேட்டர்கள் எனவும் கிராமமாக இருந்தால் சி சென்டர் தியேட்டர்கள் என்றும் கூறுவார்கள்.

முன்பெல்லாம் பெரிய நகரங்களில் ஏ சென்டர் தியேட்டர்களில் ரிலீஸாகும் புதிய படங்கள் பிறகு பி சென்டர்களுக்கு வரும். பிறகு சி சென்டர்களுக்கும் வரும். இந்த முறையில் சென்னை கோவை மதுரை திருச்சி போன்ற பெரிய நகரங்களில் ரிலீஸாகும் படங்கள் கிராமப்புற தியேட்டர்களுக்கு வர சில ஆண்டுகள் ஆகிவிடும். அதுவரை கிராமத்து ரசிகர்கள் அந்த படங்களை காண காத்திருக்க வேண்டும்.

அந்த காலகட்டத்தில் பி மற்றும் சி சென்டர் தியேட்டர்களில் பழைய படங்களே அடிக்கடி ரி ரிலீஸ் செய்யப்படும். கிராமப்புறங்களில் உள்ள சில தியேட்டர்களில் எம்ஜிஆர் நடித்த அன்பே வா கே பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு எம்ஜிஆர் நடித்த படகோட்டி ரஜினி நடித்த மாவீரன் கமல் நடித்த காக்கிச்சட்டை சிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை போன்ற படங்களை அடிக்கடி ரிலீஸ் செய்வார்கள்.

ஆனால் அந்த காலமெல்லாம் மாறி பல ஆண்டுகளாகி விட்டது. இப்போதெல்லாம் பழைய படங்களை காண்பதே பெரிய விஷயமாகி விட்டது. தொடர்ந்து புதிய படங்கள் ரிலீஸாகும் நிலையில் ஏ பி மற்றும் சி சென்டர்கள் என எல்லா இடங்களிலும் புதிய படங்கள் ரிலீஸாகின்றன. அதனால் ரசிகர்கள் புதிய படங்களை உடனுக்குடன் பார்த்து விடுகின்றனர்.

அதே நேரத்தில் பழைய படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு தமிழ் சினிமாவில் வசூலில் சக்கைப் போடு போட்டு வருகின்றன. சமீபத்தில் விஜய் நடித்த சச்சின் படம் ரிலீஸாகி ரூ. 15 கோடி வசூலை கடந்திருக்கிறது. இதையடுத்து கேப்டன் பிரபாகரன் காதலுக்கு மரியாதை உள்ளத்தை அள்ளித்தா பஞ்சதந்திரம் ஆட்டோகிராப் வீரம் போன்ற படங்கள் அடுத்தடுத்து வர இருக்கின்றன.

இந்நிலையில் சச்சின் படத்தின் சக்ஸஸ் மீட்டில் பேசிய தயாரிப்பாளர் தாணு, அடுத்ததாக ராஜீவ் மேனன் இயக்கத்தில் அஜீத்குமார் மம்முட்டி ஐஸ்வர்யா ராய் தபு உள்ளிட்டோர் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். சூர்யா ஜோதிகா நடித்த காக்க காக்க, ரஜினிகாந்த் ராதிகா ஆப்தே நடித்த கபாலி போன்ற படங்களையும் ரி ரிலீஸ் செய்ய ஏற்பாடுகளை செய்து உள்ளதாக தெரிவித்தார். இதனால் இனி தொடர்ந்து பழைய படங்களை தியேட்டர்களில் ரசிகர்கள் கண்டுரசிக்கலாம்.

சற்று முன்