- Advertisement -
Homeபொழுதுபோக்குகேஜிஎஃப் வில்லனை அப்படியே தூக்கிக்கொண்டு வந்த கங்குவா படக்குழு, அப்படின்னா சும்மா மிரட்டலா இருக்குமே

கேஜிஎஃப் வில்லனை அப்படியே தூக்கிக்கொண்டு வந்த கங்குவா படக்குழு, அப்படின்னா சும்மா மிரட்டலா இருக்குமே

- Advertisement -

“கேஜிஎஃப்”, “கேஜிஎஃப் 2” ஆகிய திரைப்படங்கள் இந்திய ரசிகர்களிடையே எந்தளவுக்கு வரவேற்பு பெற்றது என்பதை நாம் பார்த்திருப்போம். கன்னட சினிமாத்துறையின் மார்க்கெட்டை வேற லெவலுக்கு தூக்கிவிட்ட திரைப்படமாக கேஜிஎஃப் அமைந்தது. மேலும் வசூலில் அரக்கனாக பல கோடிகளை அள்ளி சாதனையையும் படைத்தது.

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் “கங்குவா” திரைப்படத்தில் “கேஜிஎஃப்” திரைப்படத்தின் வில்லன் நடிகர் நடிக்க உள்ளாராம். “கேஜிஎஃப்” திரைப்படத்தில் ஆண்ட்ரூஸ் என்ற டெரரான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் பி.எஸ்.அவிநாஷ். இவர் “கங்குவா” திரைப்படத்திலும் தற்போது நடிக்கவுள்ளாராம்.

- Advertisement -

கன்னடத்தில் “கேஜிஎஃப்” மட்டுமல்லாது பல திரைப்படங்களில் நடித்து வருபவர் அவிநாஷ். இந்த நிலையில் தற்போது “கங்குவா” திரைப்படத்தில் சூர்யாவுக்கு தந்தையாக இவர் நடிக்க உள்ளாராம். இவ்வாறு ஒரு தகவல் இணையத்தில் தற்போது வெளிவந்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கி வரும் “கங்குவா” திரைப்படம் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி செலவில் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

- Advertisement -

“கங்குவா” திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திசா படானி நடித்து வருகிறார். இத்திரைப்படம் முன் ஜென்மத்தை அடிப்படையாக வைத்து ஒரு வரலாற்று ஃபிக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறதாம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் நடைபெற்று வந்தது. தற்போது தாய்லாந்து பகுதியில் நடைபெற்று வருகிறது.

கடந்த சூர்யாவின் பிறந்தநாளின்போது “கங்குவா” திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியானது. அது மிகவும் அசத்தலாக உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த கிளிம்ப்ஸ் வீடியோ இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

சற்று முன்